*ஞானம் 1 : "கவலைக்கு காரணம், நம்மனதுக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு நபரோ, பொருளோ அல்லது ஒரு சூழ்நிலையோ இல்லை", என்று புரிந்து கொண்டவனே ஆன்மீகத்தின் முதல் படியை கடந்தவன் !!!*
*அப்படியானால், கவலைபடுபவனும், வெறுப்படைபவனும், எதிரியுள்ளவனும், கோவப்படுபவனும், பழிவாங்க நினைப்பவனும், பிறரைத் துன்புறுத்துபவனும் என இவர்கள் யாவரும் ஆன்மீகவாதியே அல்ல.*
*ஞானம் 2 : "அனைத்து கவலைகளுக்கும் காரணம் நம் மனமே !!!" இதைப் புரிந்து கொண்டவனே ஆன்மீகத்தின் இரண்டாம் படியை கடந்தவன்.*
*அனைத்துக் கவலைகளுக்கும் காரணத்தை உன்னிடத்திலேயே தேட வேண்டும். "அவன் என்னை ஏமாற்றி விட்டான்" என்று எண்ணுபவன் ஆன்மீகத்தின் முதல் படியை கூட கடக்காதவன் !!! "என் அஜாக்கிரதையால் தான், நான் ஏமாந்தேன்" என்று எண்ணுபவனே ஆன்மீகத்தின் இரண்டாம் படியை கடந்தவன்.*
*தன் மனமே எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்று நினைத்தால், அவன் மனம் வெகு விரைவாக பக்குவப் படுகிறது.*
*ஞானம் 3 இறுதியாக அந்த பக்கவப் பட்ட மனமும் பிரச்சனைக்கு காரணம் அல்ல என்று நினைப்பவனே, ஆன்மீகத்தின் மூன்றாம் படியை கடந்தவன். அவனே முழுமையான ஆன்மீகவாதி !!!*
*இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்ன? கவலைக்கு காரணம், உன் மனதுக்கு வெளியிலும் இல்லை + உள்ளேயும் இல்லை !!!*
*அப்படியானால் "கவலைக்கு காரணமே இல்லை" என்று பொருளாகிறது !!! காரணமே இல்லாமல் கவலை என்கிற காரியம் மட்டும் தனித்து இருக்க முடியாது !!! எனவே கவலை என்ற ஒன்று இல்லவே இல்லை !!! இதுவே, சத்தியம் !!!*
*அடப் போங்கய்யா !!! நான் தான் அனுபவிக்கின்றேனே !!! "அதெல்லாம் கவலைகள் இல்லையா?", என்று சில கேட்கலாம். அந்த நிகழ்வுகள் யாவும் உண்மைகளே !!! சில வகையான நிகழ்வுகளை நம் மனம் ஏற்றுக்கொள்ள விரும்பாத போதும், அதேசமயம், அவற்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் வரும் வரும்பொழுது, நம் மனதில் அப்போது தோன்றுகின்ற ஒரு வெறுப்புணர்வு தான் கவலை என்பது !!!*
*கவலை என்ற ஒன்று இல்லாத போதும் அந்த இல்லாத கவலையை பற்றிய உணர்வை, நாமே நம் மனதில் ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது தெளிவாகின்றது !!! இல்லாத கிணற்றில் வீழ்ந்து, உயிருக்காக ஒருவன் தத்தளிப்பது போல, இல்லாத கவலைகளை இருப்பதாக நினைத்துக் கொண்டு அவன் துன்பப்படுகின்றான் !!! ஆக, "நாம் நம் மனதில் கவலைகளை அனுமதிப்பதன் மூலம் தான், கவலைகள் நம்மை தாக்கத் தொடங்குகின்றன", என்று புரிந்து கொள்ள வேண்டும் !!!*
*ஞானம் 4 : ஒரு நிகழ்வில், உன்குற்றம் என்று ஒன்று, "எதுவுமே" இல்லாத போது, அந்த நிகழ்வுக்காக, நீ கவலைப்படக் கூடாது !!! அதாவது, செய்யாத குற்றத்திற்கு நீ எப்போதும் கவலைப்படக் கூடாது !!! அதற்காக, நீ அழவும் கூடாது !!! எனவே, செய்யாத குற்றத்திற்கு கலைப்பட மாட்டேன் என உறுதி கொள் !!! அழவும் மாட்டேன் எனத் திடமாய் இரு !!! ஒருவேளை நீ கவலைப்பட்டாலோ, அல்லது அழுது விட்டாலோ, அந்த குற்றத்தை நீ ஒப்புக்கொள்வதாக பொருள் !!!*
*ஞானம் 5 : இறைவனிடம் சரணாகதி அடைந்தவன் எந்த ஒரு பிரச்சனைக்கும் கவலைப்படவே மாட்டான். ஒருவேளை அவன் கவலைப் பட்டால், அவனது சரணாகதியானது பூரணமற்றது என்று பொருள் !!!*
*நம் எல்லோருக்குமே இப்போது கற்கும் மெஞ்ஞானம் என்றும் நினைவிருக்க வேண்டும். ஏனெனில் இது விஞ்ஞானம் அல்ல மறப்பதற்கு !!! ஏனெனில் ஒருவருக்கு ஞானம் எவ்வளவு காலம் மனதில் நிலை நிற்குமோ அவ்வளவு காலம் தான் கவலைகள் அவரை தீண்டாது !!!*
*ஒரு ஆத்ம ஞானி பிறருக்கு ஞானத்தை கற்பிப்பதன் மூலமாகவும் அவர் மேலும் மேலும் தான் கற்ற ஞானத்தில் திடமாகலாம்.*
No comments:
Post a Comment