Saturday, December 10, 2022

*சிந்திக்கும் ஆற்றல் உன்னிடமுண்டு !!!

  *"நான் டிவி பார்க்கிறேன்", என்பதில் நான் என்பது வேறு ; டிவி என்பது வேறு !!! உண்மைதானே? ஒரு காட்சியை பார்ப்பவன் வேறு ; பார்க்கப்படும் பொருள் வேறு !!! அதாவது, *இவ்வுலகமானது காட்சிப்பொருள் என்றால், நிச்சயமாக அதை காண்கின்ற நீயும் இவ்வுலகத்தில் இருந்து வேறானவன் !!! ஆக, "நீ" என்பவன் வேறு !!! இவ்வுலகம் வேறு !!! *இதுவே சொல்ல வந்த ஞானம்*

ஆனால், இவ்வுலகமானது, உணர்வற்ற... உயிரற்ற ஒரு வஸ்த்து !!! அப்படிப்பட்ட *இந்த உலகத்தில்தான், "மிகச் சிறியதொரு துளியாக "நீ" இருக்கின்றாய் !!!
*நீ துளியாக இருப்பினும், *சிந்திக்கும் ஆற்றல் உன்னிடமுண்டு !!! நான் என்று சொல்லிக் கொள்ளும் உணர்வுமுண்டு !!! உயிருமுண்டு* !!! ஆக, சிந்திக்கின்ற உயிரும் உணர்வுமுள்ள ஜீவனே "நீ" !!!
எனவே இந்த உலகத்தைக் காட்டிலும் *நீயே சிறந்தவன் !!! உயர்ந்தவன் !!! மேன்மையானவன்* !!! புரிகின்றதா ?
தங்கம் வைரம் என மலைமலையாக கொட்டிக் கிடந்தாலும், அவை எல்லாவற்றை காட்டிலும் நீயே உயர்ந்தவன் சிறந்தவன் ஏனெனில், அவற்றிற் கெல்லாம் உணர்வும் இல்லை !!! உயிரும் இல்லை !!!
இவ்வுலகம் அனைத்திலும் நான் என்று சொல்லிக் கொள்ளும் "நீ ஒப்பில்லாதவன் !!! மிகச் சிறந்தவன் !!! உயர்ந்தவன் !!! மேன்மையானவன் !!! புரிகின்றதா*? புரியாதவர்களுக்கு இதோ ... புரியவைக்கின்றேன் !!!
ஒருவன் ஒரு பொருளை பார்க்கின்ற நிகழ்வு நிகழ்ந்து விட்டாலே, ... *அப்பொருள் அவனால் "பார்க்கப் படுவதற்காகவே" படைக்கப் பட்டது* என்று பொருளாகிறது !!!
மாறாக, ஒருவன் ஒரு பொருளை பார்க்கின்ற நிகழ்வு நிகழாதபோது, ... *அவனைப் பொறுத்த வரை அது அழகாக இருந்தும் பயனில்லை !!! அப்பொருள் படைக்கப் படாததற்கு சமமாகும்* !!! அதாவது, ரசிக்கின்ற "நீ" இல்லாதபோது படைக்கப்பட்ட பொருள் அழகாய் இருந்து என்ன பயன்?
ஆம் !!! *ஆத்மஞானத்தை நாடும் எனதருமை ஆன்மீக சகோதர சகோதரிகளே* !!! இவ்வுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை நிகழ்வுகளுமே நான் (என்கிற நீ) ரசிப்பதற்காகவே நிகழ்கின்றன !!!
நிகழ்வுகள் மட்டுமல்ல !!! *இவ்வுலகில் படைக்கப் பட்டுள்ள எல்லா அழகானவைகளும்,அதிசயமானவைகளும், ஆச்சர்யமானவைகளும், நீ ரசிப்பதற்காகவே* !!!
மொத்ததில், இவ்வுலகமே உனக்காகத்தான் படைக்கப் பட்டுள்ளது. !!! —> என்று இப்போது உணர்கின்றீர்களா ?
கண்ணதாசன் ஏற்கனவே சொன்னது தானுங்க !!! உலகம் பிறந்தது எனக்காக; ஓடும் நதிகளும் எனக்காக; மலர்கள் மலர்வது எனக்காக; (இயற்கை- அன்னை) அன்னை மடியை விரித்தாள் எனக்காக !!!
இந்த உலகத்தைக் காட்டிலும் நான் (என்கிற நீயே) மிகச்சிறந்தவன் !!! உயர்ந்தவன் !!! மேன்மையானவன் !!! —> என்பதையும் உணர வேண்டும்*
என் கண்ணில் படுபவை அனைத்தும் —> உனக்காகவே மற்றும் *நீ அனுபவிப்ப தற்காகவே நிகழ்த்தப் படுகின்றன*!!! (Everything that catches my eye -> is performed for you and for you to enjoy !!!)
இவ்வுலகமும், இங்கு உள்ள அனைத்தும் உனக்காகவே !!! நீ ரசிப்பதற்காகவே (*This world and everything here is just for you*!!!).
ஒருவேளை நீ மட்டும் இவ்வுலகில் பிறந்திருந்தால் இவ்வுலகமே உன்னுடையது மட்டும் தான் !!! ஆனால், அப்போது என்னுடையது என்கிற எண்ணம் உனக்கு அதில் இருக்காது !!! ஆக என்னுடையது என்ற எண்ணம் இல்லாமல் இந்த உலகத்தை நீ அனுபவிப்பது போல, இப்போதும் நீ அதே போலவே அனுபவிக்க வேண்டும் !!!
அதாவது நீ வாழ விரும்புவது போலவே அனைத்து ஜீவராசிகளையும் வாழவிடு !!!
*நீ அனுபவிப்பது போலவே பிறரையும் பிற உயிர்களையும் இவ்வுலகத்தை பகிர்ந்து கொள்ள பொது நலத்தோடு அனுமதித்திருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது*.
ஆனால் இந்த ஞானம் கிடைக்காமல் போனதால்தான் 'அது' என்னுடையது 'இது' என்னுடையது என்று நீ பிறரோடு *வாதிட்டு கொண்டே இருக்கின்றாய்* !!!
நீ இருக்கும் வரை உலகம் இங்கே இருக்கும் !!! அதன்பின்பு உன் உடல் உலகத்தோடு சேர்ந்து விடும் !!!
உன்னைப் பொருத்தவரை நீ இல்லாத-இவ்வுலகில் ஆச்சர்யமூட்டும் அதிசயங்கள் அத்தனையும் ... அவை இருந்தும் இல்லாததற்கு சமமாகும் !!!
மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்த உலகத்தில் நீ பிறந்தாய் என்பதைவிட ஒரு பொம்மை யைப் போல இந்த உலகம் உனக்காகவே செய்து கொடுக்கப்பட்டது என்பதே சத்தியம் !!!
மானிடராய் பிறத்தல் அரிது என்ற அவ்வையாரின் சொல்லின் ஆழமான அர்த்தத்தை இங்கே நாம் உணர்ந்து விட்டோம். இப்படிப்பட்ட அரிதான மானிட பிறவியில் நீ எதற்காக இந்த பூமிக்கு வந்தாய் என்பதை மறந்து விட்டு பொண்ணுக்கும் பொருளுக்கும் உறவுக்கும் நீ காலத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய் !!!
ஆத்ம ஞானத்தை அடையாத வரை* நீ எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், உனது அந்த இறந்தகாலம் உனது *இறந்து விட்ட காலமே*!!! அவை வெரும் இறந்துவிட்ட நிகழ்வுகளின் தொகுப்பு மாத்திரமே. அது நீ வாழாத நாட்களே !!!
நீ எந்த திசையில் நடந்தாலும் அது உன் மரணத்துக்கான பாதை என புரிந்து கொள் !!! நீ செல்லும் பாதையில் மரணம் உன்னை சந்திப்பதற்கு முன்பாக நீ உன்னை உணர்ந்து விடு !!! ஆம் மானிடா உன்னில் இருக்கும் உன்னை நீ உணர்ந்து விடு !!!
திடீரென நானும் மௌனமாகி விடலாம் !!! ஆத்ம ஞானமும் குருவும் கிடைப்பது அரிது என உணர்ந்தால், உன்னிடம் தன்னுணர்வு தேடல் இருப்பது உண்மை என உணர்ந்தால், உன்னை நீ அறிய வேண்டும் என உணர்ந்தால், உடனே ஞான யோக பயிற்சி எடுத்துக் கொள் !!!
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கவலையில்லாமல் வாழ்வதற்காகவே நீ மனிதனாக பூமிக்கு வந்திருக்கிறாய் !!!
"கவலை இல்லாமல் வாழ்பவனே எனக்கு பிரியமானவன்", என்று இறைவன் கீதையில் கூறுகின்றார் !!!
ஆக இறைவனின் விருப்பமான கவலையற்ற வாழ்க்கையை மனிதன் வாழ்வதுதான் ஆன்மீகத்தின் நிறை நிலை !!! அதுவே இறை நிலையின் நிறைநிலை !!! அதுவே ஆன்மீகத்தின் எல்லை !!! அதுவே உனக்கு பிறவா வரத்தை தரும் !!! அதுவே உனக்கு பிறகு பயனாகும் !!! இந்த ஆத்ம ஞானத்தை நீ பெற்றதோடு இல்லாமல் , யாரேனும் ஒருவருக்காவது அந்த மேன்மையான ஞானத்தை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.
கீதை கூறுகின்ற இந்த மகா ஞானமானது உன் மனதில் நிலைத்து விட்டால், போதுமுங்க ! அதன் பின்பு நீங்க ஞானிதானங்க ! எந்த ஒரு கவலையும் உங்களுக்கு இருக்காதுங்க !
இந்த ஞானம், உன்னில் நீயே மகிழ்ந்திருக்க உதவுமுங்க !!!
இதுவே ஜீவன்முக்திங்க !!!
இதுவே பூலோக மோட்சமுங்க !!!
இதுவே பிறவிப்பயன் !!!
இதற்காகத்தான் நீ மனிதனாகப் பிறந்திருக்கின்றாய் !!!
இதற்காகவே, உனக்கு இந்த உலகமும் காலமும் தரப்பட்டுள்ளது !!!
காலம் பொன்னைவிட மேன்மையானது என எல்லோருக்கும் தெரியும் !!! ஆனால், உண்மையிலேயே அது எந்த அளவுக்கு மேன்மையானது, ( *HOW MUCH IT IS GREATER THAN THE GOLD* ) என்பதை இந்தப் பதிவிலேயே புரிந்து கொண்டமைக்கு ... ... ...
நன்றி நன்றி நன்றி !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...