காலையில் பழையது
மதியம் சாதாரண ஒரு கறியுடன் சாப்பாடு
இரவு மதியம் வடித்த அதே சாதம்.
காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது.
வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு. ஊருக்கு போய் வரலாம்.
தினமும் எல்லா அனுஷ்டானம் களும் செய்யணும்.
சுமார் 2 மணி நேரம் பாடம்
பின் 6 மணி நேரம் சந்தை சொல்லணும்.
மிக கடினமான படிப்பு.
கண்டிப்பு மிக அதிகம்.
என்ன தான் இருந்தாலும், இன்று அவர்கள் எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்கள்.
அமெரிக்கவிலிந்து, இந்தியா எங்கும் நல்ல மதிப்பும் செழிப்புமாக இருக்கின்றனர்.
வேதம் என்றும் ரக்ஷிக்கும், காக்கும்.
அவர்கள் கஷ்டப்பட்டது பலன் கொடுத்திருக்கிறது என்ற மகிழ்ச்சி அவர்கள் உணர்கின்றனர்!
விளையாட வேண்டிய வயசுல விளையாடாம, மற்ற பசங்க மாதிரி ரொம்ப நேரம் தூங்கிட்டு மெதுவா எழுந்திருக்காம, சீக்கிரம் தூங்காம லேட்டா தூங்கிட்டு, அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, இப்படி எல்லோரையும் விட்டுட்டு விவரம் அறியாத வயசுல வேதத்தை தவிர வேற ஒன்னுமே உலகம் இல்லை அப்படின்னு நினைச்சுட்டு வேதம் படிக்க வர்ற பசங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.
ஒரு டிவி உண்டா? சினிமா உண்டா? பொழுது போக்கு உண்டா? ஜாலியா லீவுல ஊர் சுற்றினோம்னு உண்டா? இப்படி எதுவுமே கிடையாது இந்த பசங்களுக்கு. வருஷத்துல ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் விடுமுறை இவங்களுக்கு. தீபாவளி சமயத்துலயும், மே மாதத்துலயும் மட்டுமே இவர்கள் தாய் தகப்பனாருடன் சேர்ந்து வாழ முடியும்
கிட்டத்தட்ட 8 வருடங்கள் வரை குடும்பம், உற்றார் உறவினரை பிரிந்து வேதம் கற்கும் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ...
பணம் இருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வேதம் படிக்க வேண்டுமானால் தாய் தகப்பன் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே குழந்தைகள் வேதம் படிக்க முடியும்.
நன்றி .
No comments:
Post a Comment