கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால், மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மக்களிடையே குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை இதன் தாக்கம் நீடித்தது.
இதையடுத்து மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வந்தனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணத்தை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்கும் வங்கிகளுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். மாத கணக்கில் ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடந்ததால் மக்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் போனது.
மக்கள் சிரமம் நீடிக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டை அறிமுகம் செய்தது. பழைய 500 ரூபாய்க்கு பதில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ. 500 நோட்டும் அச்சிடப்பட்டது. இதன் காரணமாக ரூபாய் நோட்டு விவகாரம் விரைவில் முடிவுக்கு வந்தது.
பழைய நோட்டுக்குப் பதிலாகப் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. புதிதாக வெளிவந்த 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு பழைய ரூபாய் நோட்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களிடையே ஏற்பட்டுள்ள சில்லறைத் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது. 200 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்து, அச்சடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய 200 ரூபாய் அறிமுகப்படுத்தும் முடிவு மத்திய நிதியமைச்சகத்துடன் மார்ச் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விரைவில், 200 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2000 ரூபாய் நோட்டு மட்டுமின்றி 200 ரூபாய் நோட்டையும் பார்க்க போகிறோம்...!
No comments:
Post a Comment