Wednesday, July 5, 2017

உஷார்..! வருமான வரி துறையின் நேரடி கண்காணிப்பில் நீங்கள் இருக்கிறீரகள்...!!

ஆண்டவன் புண்ணியத்தில் ஆதார் வாங்கிட்டேன் என்று பெருமூச்சு விட்டவர்களை சற்று ஓய்வு கூட எடுக்க விடமால் பான் கார்டு வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்பொழுது அடுத்த கட்டமாக இரண்டையும் இணைக்க வேண்டும் என்கிறார் கள்.
👉 இந்தியாவில் ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் மற்றும் பான் கார்ட்டை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டுள்ளனர் என்றே கூற வேண்டும். இன்று அரசு மானியங்கள் முதல் நிதி பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் இவை இரண்டும் கட்டாயமாக உள்ளது.
👉 கடந்த ஜூலை 1ஆம் தேதி ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பிற்க்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதே நேரம் மத்திய அரசு என்ஆர்ஐ, இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள், 80 வயது அல்லது அதற்கு அதிக வயது உள்ளவர்கள், அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு ரூ காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு மட்டும் இரண்டு ஆவணங்களையும் இணைப்பதில் இருந்து சில நிபந்தனைகளின் கீழ் விலக்கு அளித்துள்ளது.
பான் ஆதார் இணைப்பு செய்யவில்லை என்றால்?
👉 நீங்கள் இரண்டையும் இணைக்கவில்லையென்றால் சிக்கல்கள் எதுவும் இல்லை என்று எண்ண வேண்டாம். அதை செய்யவில்லையென்றால் தான் உங்களுக்கு ஒரு பெரிய சிக்கல் காத்திருக்கும்.
👉 வருமான வரித் துறைக்கு நீங்கள் உங்கள் வருமானத்தினைச் சரியாகக் காண்பிக்கவில்லை, வருமான வரியினைச் சரியாகச் செலுத்தவில்லை என்றும் அரசை ஏமாற்றி வருகிறீர்கள் என்றும் உங்கள் வீட்டைச் சோதனை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
இதன் நோக்கம் :
👉 ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண்ணை நீக்க வேண்டும் என்பது வருமான வரித் துறையின் நோக்கமில்லை. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இருந்து இரண்டு தனிநபர்கள் எண்கள் இருந்தால் தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன வித்தியாசம்?
👉 அடையாள அட்டையின் 12 இலக்க எண்ணை மட்டும் தரும் பான் கார்டு போல் அல்லாமல் ஆதார் கார்டு சம்மந்தப்பட்ட நபரின் பையோமெட்ரிக் தரவுகளையும் வழங்குகிறது.
எதற்காக இந்த இணைப்பு?
👉 ஆதார் விவரங்களை உங்கள் வங்கி கணக்கிற்கு நீங்கள் அளித்து இருந்தால் வருமான வரித் துறையினரால் எளிதாக உங்கள் நிதி நிலையை, உங்கள் செலவுகளைக் கண்டறிய முடியும்.
👉 இதனை வைத்துக்கொண்டு வருமான வரித் துறை நீங்கள் வரி செலுத்த வேண்டுமா என்பதைக் கண்டறிந்துவிடும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மறுப்பது வருமான வரித் துறைக்கு உங்கள் வருவாயினை மறைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படும்.
நேர்மையான வர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்புகளுமில்லை... கவலையுமில்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...