திமுக செயல் தலைவர் ஸ்டாலினைப் பொருத்தவரை அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். கலைஞரின் சட்டமன்ற வைர விழாமூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான தேசியக் கட்சிகள் ஓரணியில் நிற்பதற்குப் பிள்ளையார் சுழி போட்ட மாதிரி, ஆகஸ்ட்டில் முரசொலி பவளவிழாவை அதேபாணியில் நடத்த தி.மு.க. திட்டமிட்டிருப்பதாக நம்ம நக்கீரனில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கார். அதேபோல் 28-ந் தேதி அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரை சட்டமன்றத்தில் இருக்கும் தன் அறைக்கு அழைத்து, விழா குறித்து விளக்கி, அதில் கலந்துக்கணும்ன்னு ஸ்டாலின் அழைப்பும் விடுத்தார். அப்படியே, தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. எழுப்பும் மக்கள் பிரச்சினைகளுக்கும் நீங்கள் ஆதரவு கொடுக்கணும்னு அவர் வேண்டுகோள் வைக்க, அந்த மூன்று பேரும் பொதுப் பிரச்சினைகளில் நாம் ஒண்ணா நிற்போம்ன்னு பச்சைக்கொடி அசைச்சிருக்காங்க.
No comments:
Post a Comment