Monday, July 3, 2017

எத்தனை அணிகள்??????????????



ஒழுங்காக OPSஐ, ஆட்சியில்
தொடரச் செய்துவிட்டு,
வழக்குகள், தண்டணைகள்
போன்ற பிரச்னைகள் இல்லாத
ஒருவரை பொதுச் செயலாளராக்கிவிட்டு,
கட்சியையும் ஆட்சியையும் தொடர்ந்து
நடத்தியிருந்தால் -
அதிமுக தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் இருந்த கௌரவம் தொடர்ந்து கிடைத்திருக்கும்.
ஆனால் ஒரு குடும்பத்தின் பேராசையால்
இன்று அதிமுக என்ற மாபெரும் மக்கள்
இயக்கத்துக்கு எத்தனை அசிங்கங்கள்....
அவமானங்கள்....
நான் ஒரு அதிமுக தொண்டன் என்று சொல்லிக் கொள்வதற்கே ஒவ்வொருவனும் வெட்கப்படுகிறான். வேதனைப்படுகிறான்.
இன்று கட்சியிலும் ஆட்சியிலும் அடித்துக்கொண்டு தலைவரின் பெயரையும் அம்மாவின் பெயரையும் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை அணிகள்?
OPS அணி
சசிகலா அணி
தினகரன் அணி
பழனிச்சாமி அணி
இப்போது புதிதாக உருவாகி 
வருகிறது திவாகரன் அணி.
இத்தனை அவலத்துக்கும் காரணம் ஒரே ஒரு குடும்பத்தின் அளவு கடந்த பேராசை.
தலைவர் மற்றும் அம்மாவின் 
நினைவிடங்கள் இருக்கும் இடத்திலேயே - 
கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர புதைத்துவிட்டு அட்டகாசகமாக ஒரு நினைவிடத்தை எழுப்பி -
அந்தக் குடும்பத்தின் பெயரையும் 
பொறித்து விட்டால் -
அதிமுகவின் இன்றைக்கும் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாத கோடிக்கணக்கான தொண்டர்கள் அமைதி கொள்வார்கள்.
நிம்மதி அடைவார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...