Monday, July 3, 2017

என்ன? பரிகாரம்....

பார்வதி தேவி குளிப்பதற்கு முன் தனது உடலில் இருந்து அழுக்கை எடுத்து அந்த அழுக்கில் ஒரு அழகான பாலகனை உருவாக்கி தான் குளித்து விட்டு வரும் வரை அவனை காவல் காக்குமாறு கட்டளை இட்டாள்.

அப்பொழுது பரமசிவன் வந்தார். தன்னை உருவாக்கிய பார்வதியின் கணவர் இவர் என்றே தெரியாமல் அந்த பாலகன் சிவனை தடுத்தான். அதனால் சிவனுக்கும், அந்த பாலகனுக்கும் சண்டை வந்தது. முடிவில் அது முற்ற சிவன் தனது நெற்றிக்கண்ணால் அந்த பாலகனின் தலையை எரித்து சாம்பல் ஆக்கினார்.
குளித்து விட்டு வந்த பார்வதி நடந்ததை அறிந்து சிவனிடம் கதற உடனே சிவன் ஏதேனும் ஒரு தலையை கொண்டு வருமாறு தனது பூத கணங்களுக்கு கட்டளை இட. பூத கணங்கள் சிவனே என்று வடக்கே படுத்து கொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி எடுத்து கொண்டு வர அந்த தலையை பாலகனின் உடலோடு பொறுத்த கஜ முகனானான விநாயகர் உருவானார்.
இந்த கதையை 3 வயது குழந்தையாக இருந்த பொழுது அதாவது 25 ஆண்டுகளுக்கு முன் என் தாத்தா, பாட்டி மூலம் கேட்டேன்.
ஆதிமுதல் கடவுளான விநாயகரின் தோற்றம் இவ்வளவு கேவலமாக இருக்க வாய்ப்பு இல்லை. விநாயகரின் தோற்றம், அவதார நோக்கத்திற்கு வேறு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று அந்த வயதிலேயே பெரியவர்களோடு வாதிட்டேன்.
ரொம்ப முரட்டு தனமாக வாதம் செய்வது என்பது என் பிறவி குணம்.
பின்னர் எனது எட்டாம் வயதில் மயிலாப்பூர் ராம கிருஷ்ண மடம் சென்றேன்.
தனியாக டிரைனில் பழவந்தாங்கலில் இருந்து கிண்டிக்கு ரயிலில் சென்று கிண்டியில் இருந்து மைலாப்பூருக்கு பஸ்ஸில் சென்றேன்.
பாஸ்கராச்சார்யா அவர்களின் விளக்க உரையோடு இருந்த லலிதா சகஸ்ரநாம புத்தகத்தை எனக்கு தெரிந்த ஒரு அம்மாவுக்கு பரிசு கொடுக்க வாங்கினேன். இன்னொரு புத்தகத்தை எனக்காக வாங்கினேன்.
அதில் நான் படித்த காமேஸ்வர முகாலோக
என்னும் நாமாவளி எனது கண்களை திறந்தது.
வடக்கே தலை வைத்து படுத்தால் உடல்நலத்திற்கு அதனால் கேடு என்பது உண்மை தான். ஆனால் அதற்காக எனது விநாயகர், சிவபெருமான், பார்வதி அனைவரையும் இழிவு படுத்தி அந்த உண்மையை புரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு சிறு குழந்தையோடு சண்டை போட்டு கொல்பவரா சிவன்.
சாதாரண மகான்களுக்கு இருக்கும் ஞான திருஷ்டி கூட இல்லாதவரா சிவன்.
அந்த ஞான திருஷ்டி மூலம் இவன் பார்வதியால் படைக்கப்பட்டவன் என்பதை சிவனால் அறிய முடியாதா?
இதுபோல் பல கேள்விகள் எனது மூன்றாம் வயதில் என் மனதில் எழுந்தது. அந்த கேள்விகளுக்கான பதில்கள் எனக்கு பாஸ்கராச்சார்யா அவர்களின் லலிதா சகஸ்ரநாம பாஷ்யம் மூலம் கிடைத்தது.
விநாயகர் தோன்றிய அந்த உண்மை புராண வரலாறை நான் முதலில் Facebook, You Tube மூலம் சொன்னேன். அது சில ஆயிரம் மக்களை சென்று அடைந்தது.
இன்று.
உலகம் முழுவதும் 2.5 கோடி மக்கள் பார்க்கும் Zee தமிழின் ஒளிமயமான எதிர்காலம் நிகழ்ச்சியில் விநாயகர் தோன்றிய அந்த வரலாறு பற்றியும். காமேஸ்வர முகாலோக என்னும் அந்த மந்திரத்தின் மகத்துவம் பற்றியும் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்த விநாயக பெருமானுக்கு.
காவாங்கரை கண்ணப்ப சித்தருக்கு, திருவான்மியூர் சக்கரை அம்மாக்கு
நன்றி, நன்றி, நன்றி.
ரிலேட்டிவிட்டி தியரி, CHaos Theory போன்ற விஷயங்களை எல்லாம் விரும்பி படித்த நான் ஜோதிடத்தை இதுவரை மருந்துக்கு கூட கற்றதில்லை. காரணம் நாளை நாமும் தந்தை போல் ஜோதிடர் ஆகி விடக்கூடாது என்பதில் நான் மிக உறுதியாக இருந்தேன்.
எனது ஆன்மீக பேச்சு மிக நன்றாக இருந்தது என்பது எனக்கே தெரிகிறது.
ஆனால் என் ராசி பலன்?
தெருவில் கில்லி கூட ஆட தெரியாத ஒருவனை அழைத்து கொண்டு வந்து கிரிக்கெட் கமண்ட்ரி கொடு என்று சொன்னால் எப்படியோ அதுபோல் தான் என் ராசி பலன் இன்று இருந்திருக்கிறது.
இன்று காலை நீங்கள் பார்த்த ராசிபலன் சென்ற சனிகிழமை ஷூட்டிங் செய்யப்பட்டது.
அன்று என் அப்பா ஹாஸ்ப்பிட்டலில் இருந்து டிஸ் சார்ஜ் செய்யப்படவில்லை.
இது போன்ற ஒரு சூழலிலா நாம் மீடியா உள்ளே நுழைய வேண்டும் என்னும் வெறுப்போடு எனது முதல் எபிசோட் பேசினேன். அதை பார்த்தவர்கள் அனைவருமே உணர்ந்தார்கள்.
எனது ராசியே விருச்சிகம் தான். விருச்சிக ராசிக்கு ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் என் தந்தையின் உடல் நிலையையே நினைத்து கொண்டு நான் ராசிபலன் சொன்னதால் ஸ்லிப் ஆப் த டங். ஜென்ம சனியை அஷ்டமத்து சனி என்று சொல்லி விட்டேன்.
சென்ற சனிக்கிழமை ஒரு 2 எபிசோட், இன்று 3 எபிசோட் நாளை ஒரு 4, 5 எபிசோட் என
இப்பொழுது என் நேரம் ஜோதிட பிரபரேஷனிலேயே கழிகிறது.
இது இன்னும் 2,3 வாரத்துக்கு தான்.
அதன் பின் எனக்கு Preparation தேவையில்லை. ராசிபலனை டப்பா பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
இன்னும் 30 நாட்களில் என் தந்தை ஷூட்டிங் செய்ய ஆரம்பித்து விடுவார்.
30 நாட்களுக்கு பின்.
எனக்கு நன்றாக தெரிந்த ஆன்மிகம், சித்தர் வழிபாடு பற்றி நான் பேச டப்பா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
விநாயகரின் தோற்றம் முதல் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பல விஷயங்களை பலகோடி மக்களுக்கு வெளிப்படுத்த எனக்கு ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்த காவாங்கரை கண்ணப்ப சித்தருக்கும், திருவான்மியூர் சக்கரை அம்மனுக்கும் என் நன்றி.
பின்குறிப்பு- தீவிரமான
சித்தர் வழிபாடு ஒருவனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு கோபமே வடிவான நானே ஒரு எடுத்து காட்டு.
சாந்தமும் நிதானமும் உள்ளோர் என் போன்றே சித்தர் பால் சித்தம் செலுத்தினால்.
சிந்தியுங்கள்.
professional jealousy என்று சொல்வார்களே. அது துளி கூட இல்லாத அருமையான, திறமையான ஜோதிடர் Jo Simhaa அவர்கள்.
சுமார் 2 மாதங்களுக்கு முன் அவர் சொன்னார். எனது தந்தையின் ஜோதிடத்தை நான் ஏக வேண்டிய சூழல் வரும் என்று. அன்று என் ஜாதகம் பற்றி அவர் செய்த பதிவை நான் நம்பவில்லை. ஆனால் இன்று நான் சொன்ன ராசிபலனிலேயே அவரின் கணிப்பு பலித்து விட்டது.
ஜோதி ஷண்முகம் சாரிடம் அடியேன் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்.
இறுதிவரை நாட்டில் நடக்கும் தீங்குகளை தட்டி கேட்கும் ஒரு போராளியாக தான் நான் இருக்க விரும்புகிறேன்.
இந்த ஜோதிடமோ, அந்த ஜோதிடத்தால் கிடைக்கும் வருமானமோ எனக்கு தேவையில்லை.
இன்று என் மீது திணிக்கப்பட்ட ராசி பலன் திணிப்பு. காலத்தின் கட்டாயம்.
ஒரு வேளை நான் நாளை ஜோதிடர் ஆவதும் அதே காலத்தின் கட்டாயம் என்றால் அதை தடுக்க
என்ன? பரிகாரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...