⇲ வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.
குறை தீர்ப்பாணையம் :
⇲ வங்கிப் பரிவர்த்தனையின்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கவே வங்கிக் குறை தீர்ப்பாணையம் உள்ளது. இதன் மூலம் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தங்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு எந்தவிதச் செலவும் இன்றி தீர்வுகாணலாம்.
⇲ குறை தீர்ப்பாணையம் என்பது, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், வட்டார கிராமப்புற வங்கிகள் பட்டியலிடப்பட்ட முதன்மைக் கூட்டுறவு வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஓர் அமைப்பு. இந்த சேவையில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வரலாம்.
சேமிப்புக்கணக்கின் செயல்பாடு உறுதி அளிக்கப்பட்ட பல்வேறு சேவைகள் அளிப்பதில் குறைபாடு.
👉 கணக்கு தொடங்கஃமுடிக்க, தாமதித்தல் அல்லது மறுத்தல்.
👉 தகுந்த காரணமின்றி கடன் அனுமதி பட்டுவாடா செய்வதைத் தாமதித்தல் அல்லது மறுத்தல்.
👉 காசோலைகள், வரைவோலைகள் மூலம் பணம் அளித்தல் தாமதம் அல்லது பணம் சேகரித்தலில் தாமதம்.
👉 முன்னறிவிப்பின்றி கட்டணம் வசூலித்தல்.
👉 வைப்புகள் மீதான இதர வட்டிவிகிதம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்காதிருத்தல்.
👉 ஏடிஎம் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் இந்திய ரிசர்வ் பேங்க் அறிவுறுத்தலுக்கேற்ப செயல்படாமல் இருத்தல்.
👉 ஓய்வூதியம் அளிக்காதிருத்தல் அல்லது தாமதித்தல் - போன்ற பிரச்சனைகளை, குறை தீர்ப்பு ஆணையரிடம் முறையிடலாம்.
👉 குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப் பெற்றுக் கொண்ட ஒரு மாதத்துக்குள் பதில் தராவிட்டாலோ, புகாரை மறுத்தாலோ, திருப்திகரமாகப் பதில் அளிக்காவிட்டாலோ, குறை தீர்ப்பாணையத்திடம் தன் புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம்.
👉 அதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான (வேண்டுகோள் மூலம் முயற்சித்து திருப்திகரமான) ஒரு தீர்வைப் பெற முயல்வது நல்லது. ஆயினும் புகாருக்குரிய நிகழ்வுக்கு ஒரு வருடத்துக்குள்ளாக அந்தப் புகார் அளிக்கப்பட வேண்டும்.
👉 புகார் அளிப்பவரின் பெயர், முகவரி மற்றும் எந்த வங்கியின் மீது புகார் தரப்படுகிறதோ அந்தக் கிளையின் பெயர், முகவரி, புகாருக்கு உள்ளடக்கிய உண்மை விவரங்கள், ஏதேனும் ஆவணச்சான்றுகள் இருப்பின் அவையும், அந்த நிகழ்வினால் ஏற்பட்ட நட்டத்தின் அளவு மற்றும் தன்மை, குறை தீர்ப்பாணையத்திடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வு இவற்றுடன் ஓர் உறுதிமொழியும் அளிக்கப்பட வேண்டும்.
⇲ மேற்கொண்டு செயல்பட வேண்டிய சில கட்டளைகளை மேற்கொள்வேன் என்பதற்கான உறுதிமொழியே அது. இவை அனைத்தையும் குறை தீர்ப்பாணையத்துக்கு அளிக்கவேண்டும்.
⇲ உங்கள் புகார்களை, தபால், மின்னஞ்சல் அல்லது ஆன்லைன் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.
வங்கிக் குறை தீர்ப்பாளர் அலுவலகம் :
இந்திய ரிசர்வ் பேங்க்,
இரண்டாவது தளம்,
16, ராஜாஜி சாலை, கோட்டை சரிவு,
சென்னை - 600 001.
⇲ மின்னஞ்சல்: bocchennai@rbi.org.in
⇲ ஒரு புகாரை பெற்று ஒரு மாதகால அளவுக்குமேல் வங்கியிடமிருந்து எந்தப் பதிலும் பெறாதிருந்தால் அல்லது அந்த வங்கி புகாரை நிராகரித்திருந்தால் அல்லது அதன் பதிலில் நீங்கள் திருப்தியடையாமலிருந்தால் மட்டுமே புகார் அளிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment