ஒரு மிளகை சேர்த்தால்போதும். உண்ணும் உணவு சுவையாகிப்போகும்.
இரண்டு மிளகோடு இரண்டொரு ஆடாதோடை இலையைச் சேர்த்தால் போதும். இருமல் சளி இருக்கும் இடம் தெரியாமல் போகும்.
மூன்று மிளகோடு வெங்காயம் சேர்த்தால் முசு முசு வென முடியும் முளைக்குமே.
நான்கு மிளகோடு சுக்கு சேர்த்தால் நெஞ்சுவலி கொஞ்சமும் இல்லாமல் போகும்.
ஐந்து மிளகோடு சுக்கும் திப்பிலியும் சேர்ந்தால் நாள்பட்ட கோளையும் அகன்றிடுமே.
ஆறு மிளகோடு பெருஞ்சீரகம் சேர்த்தால் ஆறிடும் பலநாள் மூலமும்.
ஏழு மிளகைத் தூள் செய்து உண்டால் தொண்டைப்புண்ணும் ஆறிடுமே.
பசிக்காத வயிறும் பசிக்கும்.
பசிக்காத வயிறும் பசிக்கும்.
எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்தால் எடுக்கும் வாந்தியும் உடனே நிற்கும்.
ஒன்பது மிளகோடு துளசி சேர்ந்தால் ஒவ்வாமை உடனே அகன்றிடுமே.
பத்து மிளகு சேர்த்த உணவை பகைவன் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்.
No comments:
Post a Comment