கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் சரி, தமிழ்நாட்டில் யார் ஆண்டாலும் சரி கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததும் தொடர் கதையாகிவிட்டது. எந்தக் கட்சி ஆள்கிறது என்பது முக்கியமல்ல, அது சட்டத்தின் ஆட்சியாக நடக்கிறதா என்பதே முக்கியம்.
நர்மதா நதிப் பிரச்சினையில் நடுவர் நீதிமன்றத்தை உடனே அமைத்த மத்திய அரசு, கிருஷ்ணா நதி வழக்கில் உடனே மேலாண்மை வாரியத்தை அமைத்த இந்த மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் 10 ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது? இத்தனைக்கும், ‘காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் நியமிக்காவிட்டால், எங்களுடைய தீர்ப்பு வெறும் வெற்றுக் காகிதமே’ என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது.
சரியானதுதான்.!ஆனால் இதுவரை ஒருவேளை காவிரி வந்தாலும் அதை சேகரிக்க ஒரு துரும்புகூட தமிழ்நாடு செய்யவில்லை!கர்நாடகா எத்தனை அணைகள் கட்டியுள்ளது!
No comments:
Post a Comment