Saturday, August 5, 2017

*சண்டே ஸ்பெஷல் "செய்திக்கதிர்"*

*நான் ஓபிஎஸ் அல்ல - நிரூபித்த கொங்கு சிங்கம்!*
ஜெயலலிதா ஜெயிலுக்கு போனாலும், மருத்துவமனைக்கு போனாலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று திரும்ப ஒப்படைத்தவர் ஓ.பன்னீர் செல்வம்!
ஜெயலலிதாவின் மீது உள்ள மரியாதையின் காரணமாக அவர் இறந்த பிறகும் அவர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமராதவர் என்ற கூடுதல் பெருமையும் அவருக்குண்டு!
நெருக்கடியான ஒரு தருணத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பழனிச்சாமியும் அதே போல் நமக்கு விசுவாசமாக இருப்பார் என எண்ணிய சசிகலா மற்றும் தினகரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறார் எடப்பாடி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு பிறகு விசுவரூபம் எடுத்த எடப்பாடி தனக்கென வளையத்தை அமைத்து தான் நினைப்பதை அவர்களை வைத்து பேச துவங்கினார்.
பிஜேபிக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு அளவிற்கு செல்வாக்கு உள்ள காரணத்தால் பழனிச்சாமியின் சமூக ஆதரவு தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற பயன்படும் என்ற முடிவிற்கு வந்தது கூடுதல் சாதகமானது.
பணம், பவர், பதவி மூன்று சக்திகளும் முழு அளவில் பயன்படுத்தபட பேசாமலே காரியம் சாதிக்க துவங்கினார் எடப்பாடி. தினகரன் ஜெயிலிருந்து வெளியே வந்து போனில் பழனிச்சாமியை அழைத்தாராம், போனை எடுத்தவர் ஐயா ரொம்ப பிஸியாக இருக்கிறார் பிறகு அழைக்கிறேன் என சொல்ல சொன்னார் என்றாராம். அந்த "பிறகு" இதுவரை வரவேயில்லை.
கூப்பிட்டு கையெழுத்து போட சொன்னால் போடுவார் என எதிர்பார்த்த எடப்பாடியாரின் அதிரடியால் நொந்து போன தினகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் "ஓபிஎஸ் தெய்வம்யா! அவரை பதவியிலிருந்து இறக்கிய பாவம் இப்ப நாம அனுபவிக்கிறோம்" என உருகியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...