Saturday, August 5, 2017

சந்த்ர க்ரஹணம்.

ஆகஸ்ட் 7ம் தேதி சந்த்ர க்ரஹணம். இந்த க்ரஹணம் திருவோணம் நட்சத்திரத்தில் வருவதால் இந்த நட்சத்திரக்காரர்கள் மற்றும் மகர ராசியை சேர்ந்தவர்கள் விதிப்படி செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. "த்ரிஷட்டஸாயோபகதே நராணாம் ஸுபப்ரதம் ஸ்யாத்க்ரஹணம் ரவீந்த்வோ: த்விஸப்த ஸந்தேஷு ச மத்யமம் ஸ்யாச்சேஷேஷ்வ நிஷ்டம் முனயோ வதந்தி" என்பதால் ஜன்ம ராசியிலிருந்து 3, 6, 10, 11 ஸ்தானங்களில் க்ரஹணம் ஸம்பவித்தால் அது சுபம். 2, 7, 9 ராசிகளுக்கு மத்யம பலன். 1, 4, 5, 8, 12ல் அசுபம் என்று மஹரிஷிகள் தெரியபடுத்துகிறார்கள். அதனால் மஹரிஷிகளின் வாக்கின்படி மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிக்காரர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும். ஜோதிட சாஸ்த்திரத்தின் படி பல்வேறு ராசிகளின் பலன்கள். மேஷம் - சுகம், ரிஷபம் - மானக்கேடு, மிதுனம் - மரணபயம், கடகம் - பெண்களினால் கஷ்டம், சிம்மம் - ஸௌக்கியம், கன்னி - கவலை, துலாம் - சரீர உபாதை, விருச்சிகம் - தனலாபம், தனுசு - காயம், மகரம் - மூளையதிர்ச்சி, கும்பம் - கேடு, மீனம் - லாபம். மேலே கூறிய பலன்கள் 6 மாதங்களில் ஏற்படும். 2) என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? க்ரஹண சாந்திக்கு ஜோதிட, தர்மசாஸ்திர நூல்கள் 3 வகையான சாந்திகளை பரிந்துரைக்கின்றன. அவை 1) பிம்ப தானம் 2) மந்த்ர ஸ்நானம் 3) ஓஷதி ஸ்நானம். இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம். 3) க்ரஹண நாளன்று செய்யக் கூடியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? இரவில் இரண்டாவது ஜாமத்தில் க்ரஹணம் ஏற்படுவதால் முதல் மூன்று ஜாமங்கள் க்ரஹணத்தின் தாக்கம் இருக்கும். அதனால் மதியம் 12.10 லிருந்து க்ரஹணத்தின் தாக்கம் இருப்பதால் அதற்குள் சாப்பிட வேண்டும். ஆனால் வயதானவர்கள், வியாதியஸ்தர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மாலை 4.56மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவர்களும் எதுவும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் இரவு 8.08மணி வரை ஏதாவது ஸாத்வீகமான பதார்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். 4) இரவு 12.48மணிக்கு மோக்ஷானந்தரம் மோக்ஷ ஸ்நானத்தை ஆசரித்து எல்லோரும் மிதமான ஆகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். 5) க்ரஹண சமயத்தில் தூங்கினால் வியாதியும், மூத்ர விஸர்ஜனம் செய்தால் தரித்திரமும், மல விஸர்ஜனம் செய்தால் கிருமி வியாதியும், உடல் உறவு மூலம் பன்றி பிறப்பும், ஸ்நானம் மூலம் குஷ்டரோகமும், சாப்பிடுவதன் மூலம் நரகமும் கிடைக்குமென்று பல சாஸ்திரங்கள் கூறுகின்றன. 6) க்ரஹணத்திற்கு முன் சமைத்தவை பின்னர் உபயோகப்படாதா? க்ரஹணத்திற்கு மமுன் சமைத்தவை க்ரஹணம் முடிந்த பிறகு சாப்பிடக்கூடாது. ஆனார் இதில் சில விலக்குககள் உள்ளன. கஞ்சி, மோர், நெய், பால் இவற்றிற்கும் மற்றும் இவற்றை கொண்டு சமைத்த பதார்த்தங்களுக்கும் தோஷம் இல்லை. ஆனால் "குஸாந்தராளம் குர்வீத" என்பதிற்கேற்ப அவற்றில் தர்ப்பைகள் போட்டிருக்க வேண்டும். 7) க்ரஹண சமயத்தில் மந்திர ஜபம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே? "ஸ்வஸ்வேஷ்ட தேவதா மந்த்ர ஜபம் குர்யாத் ப்ரயத்னத: யதாசக்தி ஜபேத்தேவீம் காயத்ரீம் ப்ரயதஸ்ஸதா சந்த்ர ஸூர்யோபராகேது மாலின்யமபாத் பவேத்" என்று புராண, தாந்த்ரீக வசனங்களின்படி க்ரஹண சமயத்தில் இஷ்ட தேவதா மந்த்ர ஜபம் செய்யவில்லை என்றால் மந்திரம் சக்தியற்று போய்விடும் என்று கூறியுள்ளபடியால் குருமுகமாக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். எந்த மந்திரமும் தெரியாதவர்கள் உபநயனமாகி இருந்தால் காயத்ரி மந்திரத்தை விதிப்படி ஜபிக்க வேண்டும். மற்றவர்கள் பகவானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். 8) இந்த க்ரஹணத்திற்கு வேறு ஏதாவது விசேஷம் உண்டா? இருக்கிறது. சந்த்ர க்ரஹணம் திங்கட்கிழமை அன்று ஏற்பட்டால் அதற்கு சூடாமணி க்ரஹணம் என்று பெயர். இதைப் பற்றி சாஸ்திரம் "வர்ஷேஷன்வேஷு யத்புண்யம் க்ரஹணே சந்த்ர ஸூர்யயோ: தத்புண்யம் கோடிகுணிதம் க்ராஸே சூடாமணௌ ஸ்ம்ருதம்" சாதாரண சந்த்ர க்ரஹணத்தை விட இந்த சூடாமணி க்ரஹணம் ஸ்நானம், தானம், ஜபம், ஹோமம் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான பலனை தந்தருளும் என்பது வியாஸ மஹரிஷியின் வாக்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...