அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க பிறப்பித்த உத்தரவு செல்லாது என ஆகிறது. தினகரன் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்பதால் அவர் துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருப்பதும் சட்டப்படி செல்லாது என்று ஆகிறது. ஏனெனில் அதிமுக பொதுச்செயலாளராக அம்மா இருந்தபோதே, தினகரனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.* அது மட்டுமல்ல அவர் அறிவித்த எந்த பொறுப்புகளும் இன்று முதல் செல்லாது.
டிடிவி தினகரனோ, நான்தான் அதிமுக துணை பொதுச்செயலாளர் என கூறியபடிதான் கட்சி தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக கூறி வருகிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்க்கு இவர் தகுதி இல்லாதவர். இந்த நிலையில், ஆர்டிஐ தகவல் தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment