Thursday, August 3, 2017

தெய்வீகக் குரல் .



வாழ்வில் ரொம்பவும் நல்ல மனிதர்கள் மிக சாதாரணமாய் மிடில் கிளாஸ் மக்களாய், பலரும் அறியாத படி, எங்கோ ஒரு மூலையில் இருப்பதை போல் ஒரு நல்ல பாடகி நிறைய பாடல்கள் பாடா விடினும் என்றைக்கும் மனதில் நிறைகிறார். அவர் தான் ஜென்சி.80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்தவர் ஜென்சி. தமிழில் முதன் முதலில் மகேந்திரனின் classic-கான " முள்ளும் மலரும்" படத்தில் "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்" என்ற பாடலை பாடினார். இவரது எந்த பாடலை கேட்கும் போதும் மனம் பொன்னூஞ்சல் ஆடவே செய்கிறது.பிறகு "ப்ரியா"வில் ஜேசுதாசுடன் இணைந்து " என்னுயிர் நீதானே" பாடலை பாடினார். இந்த பாடலும் ஒரு அற்புதமான பாடல்; பல்லவியில் ஜேசுதாசும், இவரும் மாறி மாறி உடனுக்குடன் பாடுகிற மாதிரி மிக அழகாக இந்த பாடலை வடிவமைத்திருப்பார் இளைய ராஜா.பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகளில் இரண்டு பாடல்கள்.. "தம்தன தம்தன தாளம் வரும்.. " இது மிக வேகமாக செல்லும் பாடல். அனாயசமாக பாடியிருப்பார் ஜென்சி.இன்னொரு பாடலான "இதயம் போகுதே.. எனையே பிரிந்தே" அந்த காலத்தில் காதலர்களின் தேசிய கீதமாக ரொம்ப காலம் இருந்தது!! அடுத்து பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்களில் மீண்டும் இரு பாடல்கள்.. "ஆயிரம் மலர்களே மலருங்கள்.."இதே படத்தில் இன்னொரு பாடலான "இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் கூட ஒரு அற்புதமான மெலடி,மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்பு வில்) ; காதல் ஓவியம் பாடும் காவியம் (அலைகள் ஓய்வதில்லை) ;தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாச பறவைகள்)
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே (டிக் டிக் டிக் ஜானி படத்தில், " என் வானிலே ஒரே வெண்ணிலா" ஜென்சியை மறக்க முடியுமா? அந்த இனிய குரல் தமிழ் சினிமால் ஒலிப்பது நின்று போனதுதான் கவலையான விடயம். தெய்வீகக் குரல் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் தமிழ் சினிமால் ஒலிப்பது நின்று போனதுதான் கவலையான .விஷயம். தெய்வீகக் குரல் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்.
Image may contain: 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...