உங்கள் உடலை பற்றி உங்களுக்கு எத்தனை விஷயங்கள் தெரியும்? நம் உடலில் வெளிப்புறமாக தெரியும் விஷயங்கள் மட்டும் தான் நமக்கு தெரியும். உள்ளே எப்படி செரிமானம் நடக்கிறது? இரத்தம் எப்படி சீறிப்பாய்ந்து செய்கிறது, கொழுப்பு எப்படி சேர்கிறது, கரைகிறது என ஒரு விஷயமும் நமக்கு தெரியாது.
சரக்கடிச்சா ஏன் நீங்க ஒரு விஷயம் மறக்குறீங்க? அதுக்கு காரணம் ஆல்கஹால் இல்ல, உங்கள் மூளையில நடக்குற சில மாற்றங்கள் தான் அதுக்கு காரணம். இப்படி நீங்க உங்க உடம்பு பத்தி கத்துக்க வேண்டியது விஷயங்கள் சிலவன இருக்கு வாங்க பார்க்கலாம்...
சரக்கடிச்சா ஏன் நீங்க ஒரு விஷயம் மறக்குறீங்க? அதுக்கு காரணம் ஆல்கஹால் இல்ல, உங்கள் மூளையில நடக்குற சில மாற்றங்கள் தான் அதுக்கு காரணம். இப்படி நீங்க உங்க உடம்பு பத்தி கத்துக்க வேண்டியது விஷயங்கள் சிலவன இருக்கு வாங்க பார்க்கலாம்...
குடி போதையில் இருக்கும் போது நீங்கள் எதையும் மறந்துவிடுவதில்லை. ஆனால், நீங்கள் குடித்து முடித்து, தூங்கி எழும் போது ஒரு பிளான்க் அவுட் (Blank Out) நிகழ்வு நடக்கும். இந்த நிகழ்வின் போது நினைவுகளை சேமிக்க மூளை தவறிவிடும். இதனால் தான், குடித்த போது நீங்கள் பேசிய சில விஷயங்களை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
மனித உடலில் இருக்கும் மொத்த இரத்த நாளத்தின் நீளம் 96,000 கிலோமீட்டர்.
நமது உடலில் இருக்கும் எலும்புகளில், அதிகமானவை கைகளில் தான் இருக்கின்றன. இரண்டு கை மற்றும் கை விரல்களில் மட்டும் 54 எலும்புகள் இடம்பெற்றுள்ளன.
உலகில் உள்ள பத்து சதவீத ஆண்கள் மற்றும் எட்டு சதவீத பெண்கள் இடது கை பழக்கம் கொண்டுள்ளவர்கள் ஆவார்கள்.
மூளையின் செல்களில் ஏற்படும் சேதத்தை முற்றிலுமாக என்றும் சரி செய்ய முடியாது.
குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.
சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.
ஒவ்வொரு நிமிடமும் மனித உடலில் நூறு மில்லியன் செல்கள் இறந்து போகின்றன.
தினசரி நீங்கள் எரிக்கும் கலோரிகளில் 20% மூளையால் எரிக்கப்படுகிறது. உடலால் வெறும் 2% தான் எரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment