இந்திய இனங்களில் தமிழர்கள்தான் உலகில் அதிக நாடுகளில் வாழ்கிறார்கள். இந்திய மொழிகளில் தமிழதான் அதிக நாடுகளில் பேசப்படுகிறது. சில நாடுகளில் தமிழதான் ஆட்சி மொழியாக இருக்கிறது. கொரியா மொழியிலும் ஜப்பான் மொழியிலும் நம் தமிழ வார்த்தைகள் கலந்து இருக்கின்றன.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் போன்ற தமிழர்கள் கலியுகம் தோன்றிய நாடகளில் வாழ்ந்தவர்கள். நமது தொண்மையை யாரும் ஒரு காலத்தால் நிர்ணயிக்க முடியாது.
சிந்து சமவெளி நாகரீகம் தமிழனுடையது என்ற இடத்திற்கு நான் போகவில்லை. அது ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டது. அதற்கு நமது இலக்கியங்களில் எந்தவிதமான் ஆதாரங்களும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட இனத்திற்கு இந்த உலகத்தில் தனிநாடு இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.
அதேநேரத்தில், இப்பொழுது எல்லாம் காலம் கடந்துப் போய்விட்டது. தமிழநாட்டில் எழும் தனிநாடு கோரிக்கை எந்த வழியிலும் ஏற்க முடியாது. உலகம் சுருங்கி விட்டது. ஒருவர் மற்றையவரை சார்ந்துதான் வாழ்ந்து ஆகவேண்டும். உணர்ச்சிவயப்பட்டு எந்த பயனும் இல்லை. இருப்பதை வைத்து திருப்திபடுவது மட்டுமே நமக்கு பயன் அளிக்கும்.
No comments:
Post a Comment