தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை இன்று பலருக்கும் உள்ளது. நீங்கள் உங்களது முடியை மிருதுவாகவும், முடி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் ஏதேனும் வழி உள்ளதா என்று யோசித்தால் உங்களது நினைவுக்கு வருவது திராட்சை விதை எண்ணெயாக தான் இருக்க வேண்டும். ஏனெனில் திராட்சை விதை எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. இது கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவியாக உள்ளது.
திராட்சையின் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் திராட்சை விதை எண்ணெயாகும். இதி அதிகளவு ஃபேட்டி ஆசிட் உள்ளது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது முடியை மிருதுவாக்க உதவுகிறது. அதிக வாசனை உள்ள எண்ணெய்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். நீங்கள் அதனை பயன்படுத்தினால் உங்களது முடி சேதமடைந்து விடும்.
தேங்காய் எண்ணெய்யை போல, திராட்சை விதை எண்ணெய் குளிர் காலத்தில் உறைந்து விடாது. இது அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற ஒன்றாக அமையும். இது முடியில் அதிக எண்ணெய் பசையை ஏற்படுத்தாது.
திராட்சை விதை எண்ணெய்யானது முடிக்கு உயிரூட்டம் தர உதவும் ஒரு இயற்கை வழிமுறையாகும். கோல்டு பிரஸ்டு ஆயிலை (cold-pressed oil) நீங்கள் பயன்படுத்த வேண்டியது அவசியம். இதில் உள்ள ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் உங்களது முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. திராட்சை விதை எண்ணெய்யானது உங்களது வேர்க்கால்களை சுத்தம் செய்கிறது.
திராட்சை விதை எண்ணெய் முடி உதிர்வை தடுத்து நிறுத்தி, புதிய முடிகளை வளர வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்ததினால் உண்டாகும் முடி உதிர்வை கூட இது சரி செய்து, புதிய முடிகள் வளர உதவுகிறது.
பொடுகுத்தொல்லை இருந்தால், முடி உதிர்வு, தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஆகியவை உண்டாகும். இந்த திராட்சை விதை எண்ணெய்யானது பொடுகுத்தொல்லையை முற்றிலும் ஒழிக்கிறது.
திராட்சை விதை எண்ணெய்யை நீங்கள் தனியாகவோ அல்லது வேறு எண்ணெய்களுடன் கலந்தோ பயன்படுத்தலாம். சூடாக்கி பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும். இதனுடன் கலந்து உபயோகிக்க லெவண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் இரண்டும் நல்ல கலவையாகும். இந்த எண்ணெய்யை தலையில் இட்டு குறைந்தது 2 நிமிடங்களாவது மசாஜ் செய்ய வேண்டும். அரைமணி நேரம் தலையில் ஊற விட்டு, தலைமுடியை கழுவி விட வேண்டும்.
No comments:
Post a Comment