இந்தியா என் நாடுதான்.. அதை நேசிக்கிறேன்.. கண்ட கழுதைங்களும் ஆட்சிக்கு வந்து, அதை சூறையாடுதுங்க.. நாடுங்கறது, நிலம் இல்லை.. அதில் வாழும்
மக்கள்.. அவங்க வாழ்வாதாரத்த பறிச்சு, இயற்கையை அழிச்சு, புல்லட் ரயில் விடறேன், புண்ணாக்கு ரயில் விடப்போறேன்னு வெத்து விளம்பரம் தேடறவங்கள கண்டிச்சா, அது தேசவிரோதமா?
மக்கள்.. அவங்க வாழ்வாதாரத்த பறிச்சு, இயற்கையை அழிச்சு, புல்லட் ரயில் விடறேன், புண்ணாக்கு ரயில் விடப்போறேன்னு வெத்து விளம்பரம் தேடறவங்கள கண்டிச்சா, அது தேசவிரோதமா?
நல்லா வளர்ந்து வந்த பொருளாதாரத்த, முட்டாள்தனமான வேலையப்பாத்து, நாசமாக்கினவங்கள கண்டிச்சா அது தேசவிரோதமா?
ஏழைங்களையெல்லாம் கொன்னுட்டு, பத்துலட்ச ரூபாய்க்கு கோட்டு வாங்கிப்போட்டா, பணக்காரநாடா ஆயிடுவோம்னு நம்பமாட்டோம்னு சொன்னா, தேசவிரோதமா?
18000 கிராமங்களில் மின் வசதியில்லங்கறப்போ, டிஜிட்டல் பரிவர்த்தனை, வெங்காய பரிவர்த்தனைன்னு முட்டாள்கள் மாதிரி பேசறத கண்டிச்சா, தேசவிரோதமா?
இதைத்தான் சாப்பிடணும்னு ஜனநாயக நாட்ல பைத்தியம் மாதிரி சொல்றத கண்டிச்சா, தேசவிரோதமா?
மத்திய அரசு அதிகாரத்த, மாநிலங்கள்ல துஷ்பிரயோகம் பண்ணி, மறைமுகமா அதிகாரம் செலுத்தற அயோக்கியத்தனத்த கண்டிக்க கூடாதா?
ரெண்டு கோடி பேர் வேலையிழந்து, சிறுதொழில்கள் அழிஞ்சு, பொருளாதாரம் படுபாதளத்துக்கு போக காரணமானவங்கள பாராட்டவா முடியும்?
யாரைக்கேட்டாலும், கடந்த மூணு வருஷத்தில ஒண்ணுமே சரியில்லைன்னு சொல்ற அளவு மோசமா ஆட்சி பண்றவங்கள, முட்டுக்கொடுக்கறவங்கள பாத்தா பாவமா இருக்கு..
ஏழைங்கள்லாம், சாப்பாட்டுக்கு இல்லாம செத்தாலும் பரவால்ல.. சாகறப்போ "பாரத் மாத்தாக்கீ ஜே" சொன்னா போதும்...
ரயில் க்க்கூஸ்ல முதல்ல தண்ணிவிடுங்க.. அப்பறமா புல்லட் ரயில் விடலாம்...
கலர்,கலரா ட்ரெஸ் போட்டு, நாடு நாடா போயி, கையை ஆட்டி போஸ் கொடுத்துட்டா, நாடு வளர்ந்திடுச்சுன்னு நம்பணும்னா, நாங்களும் காவிதான் கட்டணும்...
No comments:
Post a Comment