மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் (western classical), கிராமிய இசை (folk), கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை, இது தவிர இன்னும் இயற்கையாக அவரை அடையும் பல ஒலிகளின் இசை என இப்படி எல்லா இசைவகைகளையும் வெளியுலகிலிருந்து பெறுகிறார் இளையராஜாசார்.
அவற்றை தனது பிறவியின் மூலம் சரஸ்வதி கடாட்சத்தால் அருளப்பெற்ற அபூர்வ இசைஞானம் கொண்டு எந்தெந்த ஒலிகள் எந்தெந்த அளவில் எந்தெந்த நேரம் எப்பெப்படி அதிரவேண்டும் என்று தனக்கென்று ஒரு சூத்திரம் அமைத்துக் கொள்கிறார்.
அதன் பின்னர் திரையிசைத்துறையில் நுழைந்து இசைக்க ஆரம்பிக்கிறார் இசைஞானி இளையராஜாசார்.
அதன் பலனாக வெளிவரும் இசை மிக மிக நேர்த்தியாக இருக்கிறது.
கேட்பவர் அனைவரின் இதயங்களையும் தொடுகிறது.
அவர்களின் உணர்வுகளுடன் உரையாடும் சக்தியையும் பெறுகிறது.
கேட்பவர் அனைவரின் இதயங்களையும் தொடுகிறது.
அவர்களின் உணர்வுகளுடன் உரையாடும் சக்தியையும் பெறுகிறது.
இப்படியாக ராஜாசார் தனக்கான ஓர் இசைவடிவத்தை உருவாக்கியவராவார்.
No comments:
Post a Comment