Monday, September 18, 2017

அதிமுகவின்_கோட்டை.

திமுக-காங் 98 . இப்போ 19 க்கும் தேர்தல் வந்தா திமுக முழுசா ஜெயிச்சி ஆட்சிக்கு வந்திடும் ன்னு பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
19 தொகுதிகளிலும் (அதும் ஒன்னு ரெண்டு கூட குறைவில்லாம) திமுக ஜெயித்திடும் ன்னு எந்த அடிப்படையில் கூவித்திருக்கிறார்கள் ன்னு தெரியவில்லை.
அதிமுக, அதன் தலைவி அம்மா இல்லாமல் பலவீனப்பட்டிருப்பது உண்மையே. சின்னமில்லாமல் சிரமப்படுவதும் உண்மையே. சசி கும்பலால் சிராய்ப்பு ஏற்பட்டிருப்பதும் உண்மையே. தொண்டர்கள் தொய்வடைந்திருக்கிறார்கள் என்பதும் முழு உண்மையே.
சரி, இந்த சமயத்துல எப்படிடா அதிமுக ஜெயிக்கும்ன்னு நினைக்கறீங்க..? அதானே கேட்கறீங்க..??
இந்த சமயத்திலயும் #அதிமுக_ஜெயிக்கும்_டா.
எப்படி சாத்தியம்..?
மொதல்ல ஒன்னு, இந்த 19 தொகுதியும் அதிமுக ஜெயிச்ச தொகுதி. கிட்டத்தட்ட அனைத்து தொகுதியும்..
#அதிமுகவின்_கோட்டை. இதுல திமுக எளிதா ஜெயிக்கும்ன்னு சொல்றதே அபத்தம்.
அதிமுக அல்லா விட்டால் மக்களின் அடுத்த எதிர்பார்ப்பு நிச்சயம் திமுக தான். மாற்றுக்கருத்து இல்லை. ஆனா அந்த திமுக எந்த extra பலத்துடன் இருக்கிறது. எத்தகைய நம்பிக்கையை மக்களிடம் புதிதாக பெற்றுள்ளதுன்னு சொல்லமுடியுமா..?
ஆக்டிவ்வா இருந்த கருணாநிதி, இப்பொழுது அப்படி இல்லை என்கிற பலவீனம் திமுக க்கு இருக்கா இல்லியா..?? ஸ்டாலின் லாம் சுயபுத்தி இல்லாத ஆளுன்னு பலவீனம் இருக்கா இல்லியா..?? கூட்டணி கட்சி எல்லாம் சேர்ந்து நின்னா, கூட்டணி கட்சிக்கு சில பல தொகுதிகளை ஒதுக்கணும். அது பலவீனமா இல்லியா..? மறுபடியும் திமுக வந்தா, 'செத்திடும் தமிழ்நாடு'ன்னு இன்னும் ஒரு சாராரிடம் இருக்கும் பலமான கருத்து திமுக க்கு பலவீனமா இல்லியா..? ஸ்டாலினை பிடிக்காத தஞ்சை திமுக, அழகிரியின் ஆட்கள் உள்ள மதுரை தேனீ ஆட்கள் லாம் திமுகவிற்கு பலவீனமா இல்லியா..??
இதுக்கு லாம் பதில் இருக்கா..??
சரிப்பா. அப்படியே 19 ளையும் ஜெயிச்சி கிழிச்சு வந்தா அது என்ன மெஜாரிட்டி அரசாங்கமாவா இருக்கும்..? கட்டாயம் கூட்டணி அரசு தானே.?? அப்போ நிலையான அரசு என்கிற பேச்சே அடிபட்டு போச்சே. இது மிகப்பெரிய பலவீனமா இல்லியா..?
மக்களைக் கவரும் தலைவி ஜெயலலிதா போன்றோர் இல்லாதது அதிமுகவிற்கு பின்னடைவு தான் எனினும், அதிமுகவிற்கு வாக்களித்தவன் திமுகவிற்கு இனி வாக்களிப்பான் என எந்த அறிவாளி சொன்னான்..? இரட்டை இலை களத்தில் இருந்துவிட்டால் சசிக்கும்பலில் இருக்கும் அனைவருமே இரட்டை இலையை மீறி உதயசூரியனுக்கு வாக்களிப்பார்கள் என எவன் உறுதி கொடுக்க முடியும்.? அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் சிறு குழப்பமே திமுக வை ஜெயிக்கவச்சிடும்ன்னு சொல்றதே மகா மட்டமான வாதமில்லையா,.?
கட்சியில் குழப்பம் இருந்தாலும், ஆட்சியில் எந்த பிரச்சனையுமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது எடப்பாடியார் தலைமையில். நில அபகரிப்பு இல்லை, கட்டப்பஞ்சாயத்து இல்லை, ரவுடித்தனம் அறவே இல்லை. குறுநில மன்னர்கள் இல்லை. இது போக, மாவட்டம் தோறும் 300 கோடிக்கு மிகாமல் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடியார். நீட் போன்றவற்றில் சறுக்கி நின்றாலும், திமுக வந்திட்டா நீட்டை நீக்கிடும்ன்னு திமுக காரனே சொல்லமாட்டான் என்பது அதிமுகவிற்கு நல்ல செய்தியே.
அதிமுக தொண்டர்கள் அண்ணன் OPS அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு பணியாற்ற தொடங்கிவிட்டார்கள். அதுவும் தேர்தல் என்றால் அதிமுக காரன் அசராம விளையாடுவான் களத்தில் காற்றாற்று வெள்ளமாக. களத்தில் அதிமுக காரனை வெல்ல முடிவது அவ்வளவு எளிதல்ல என்பது ஸ்டாலின்க்கு மட்டுமல்ல, அவர் அப்பாக்கும் சேர்ந்தே தெரியும்.
சின்னத்தை மீட்டுவிட்டால், மிகச்சரியான வேட்பாளர்களை (எந்த அதிருப்தியும் இல்லாத இளைய சமுதாயத்தை) மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டால், வழக்கமான அசுரத்தனமான உழைப்பினால், எட்டாம் வள்ளல் எங்கள் பொன்மனச்செம்மல் நிறுவிய, துணிச்சல் காரி எங்கள் இதயத்தலைவி வழிநடத்திய மக்கள் இயக்கமாம்,#அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்அட்டகாசமான வெற்றியை ஈட்டி, ஆட்சியை நீட்டித்து, மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொண்டே
இருக்கும் என்பது #சத்தியம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...