டெங்கு காய்ச்சல் என்பது ,டெங்கு வைரஸ் கொண்ட ஓர் கொசு (ஏடிஸ்) ஒருவரை கடிக்கும்போது, கடிபட்டவருக்கு பரவக்கூடிய வைரஸ் நோய் ஆகும்!
அதே சமயம் டெங்கு வைரஸ் கொண்ட ரத்தத்தின் மூலமும் இந்நோய் மற்றவருக்கு பரவும் வாய்ப்புள்ளது! இந்த வைரஸ் நோய் பெரும்பாலும் கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள், கருவுற்ற பெண்கள், முதியோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே தாக்குகிறது!
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்பகட்ட முதல் வாரத்தில் கீழ்க்கண்ட அறிகுறிகள் புலப்படும்!
உடல் உஷ்ணம் கூடும் ;
எலும்பில் கடுமையான வலி உண்டாகும்! (எனவே இது Break bone fever என்றழைக்கப்படுகிறது! )
ஃப்ளூவின் அறிகுறிகள் தெரியும்.
தலைவலி மண்டையை பிளக்கும்!
தசைகளிலும் மூட்டுகளிலும் வலிதெரியும் !
வயிற்றுவலி வரும்.
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.
தோலில் நமைச்சல்; மூக்கில் ரத்தம் வடிதல் முதலியன!
நோய் முற்றும்போது டெங்கு ஜுரமும் ரத்த அழுத்தத்துடன் டெங்கு ஷாக் சின்ட்ரோமும் தெரியவரும்! டெங்கு நோய் உள்ளவரை கடித்த கொசு , மீண்டும் அடுத்தவரை கடிப்பதால் வைரஸ் ஏரியா முழுமையும் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது !
இதைத்தவிற்க மழைக்காலங்களில் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு நடவடிக்கைககளை மேற்கொள்ளவேண்டும் ! கொசுக்களை விரட்டும் பூச்சுகளை (mosquito repellent) உடல் மற்றும் துணிகளில் ஸ்ப்ரே செய்துகொள்ள வேண்டும்!
கைகளையும் கால்களையும் மறைக்கும் உடை அணியவேண்டும்!
(repellants contain DEET (N,N-diethylmetatoluamide)1
Apply permethrin on your bedding
Wear clothes that cover your arms and legs !
கொசு மருந்து அடிக்கப்பட்ட வலைகளை ஜன்னலுக்கும் படுக்கைக்கும் பயன்படுத்தவேண்டும்!
A/C உள்ளவர்கள் ஜன்னலை மூடி அதை பயன்படுத்தலாம்!
வீட்டைச்சுற்றி தண்ணீர் குட்டையாக தேங்காமலும் பானைகள், வாளிகள், டயர்கள், கொட்டாங்கச்சி, பாட்டில்கள் இவற்றில் நீர்தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்!

மற்ற கொசுக்களைப்போல் அல்லாமல் டெங்கு கொசுவின் வேட்டை நேரம் பகலே !எனவே டெங்கு பாதிக்கப்பட்ட ஏரியாவில் இரவைவிட பகலில்தான் கொசு எச்சரிக்கை அவசியம் தேவை! கை கால்களை மறைத்து உடையணிதல் கொசு எதிர்ப்பு பூச்சுகளை உபயோகிப்பதென பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்! பொதுவாக டெங்கு காய்ச்சல் வந்தால் இரண்டு வாரங்களில் நோயின் தீவிரம் குறைந்துவிடும்! அதற்குமேல் போனால் தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்!
இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட வேக்ஸின் ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்ததக்கது! நோயின் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனையை தொடர்பு கொள்வது , நோயை தீவிரமாக்கி சிகிச்சையை சிக்கலாக்காமல் விரைவில் நோயை குணப்படுத்த வழிவகுக்கும்!
No comments:
Post a Comment