*தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியா அறிவித்துள்ளார்.*
*தமிழகத்தில் அடுத்தது என்ன நடக்கும் என அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.*
_முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர்._
_கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 18 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்._
_இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்._
_நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது._
_இந்நிலையில் விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்._
_கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்._
_இதனையடுத்து குடகு சொகுசு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்._
_சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
கோர்ட் விசாரணை முடிவதற்குள், சின்னத்தை மீட்டு விடுவார்கள்......தினகரன் குரூப்பால் இனி எதுவும் செய்ய முடியாது...
சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாதா (ம்)து.
No comments:
Post a Comment