பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி.... புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். எல்லா மாதங்களிலும் விரதமிருந்து கோவிலுக்கு சென்றாலும் அந்த மாதங்களில் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவதில்லை. ஆனால் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் அசைவ உணவை தவிர்த்து விடுகிறார்கள் தெரியுமா?
🍁 புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
🍁 இத்தனை மாதமாக வெயிலால் சு+டாகியிருந்த பு+மி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இம்மாதம் சு+ட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
🍁 இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
🍁 இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சு+ட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
🍁 அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.
🍁 அது மட்டுமின்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.
🍁 இதை துளசி கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
🍁 நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைபிடித்த இந்த விரதத்தை நாமும் கடைபிடித்து நமது உடலை பாதுகாப்போம்...!!!
No comments:
Post a Comment