கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான். அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி. அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் புலவர்.
”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”
”கண்டாரோ.. மு... என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.
“யோவ்! புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்கறீரே.. இங்க வந்து கொடுத்துட்டு போனவன்தான் இருக்கிறான். வாங்கிட்டு போனவன் யாருமில்ல. சரி.. சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.
சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு கொடு” என்றாராம்.
அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.
”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”
தார்வேந்தன் சோழனே”
ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.
சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள். கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான்.
இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு. ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு.
அம்மா! நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க.. இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.
ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.
""தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு""
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு""
என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள். தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)
கம்பன் வந்து பார்த்தான். யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை. அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால.
பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏன்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.
அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி
கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம்.
என்றாள்.. நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டு,கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னால்,...
அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கனும்னு பாடினேன்.. உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா.. இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன் என்றாளாம் ஓளவை கிழவி..
எப்பூடி....நம்ம தமிழ்....
No comments:
Post a Comment