இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், டிடிவி தினகரன் முதல்வர் மீது இல்லாத ஒரு வழக்கை இட்டு கட்டி பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் மீது இது போன்ற குற்றசட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருவது கண்டிகத்தக்கது என்றும் எடப்பாடி பழனிசாமி எந்த பதவியும் நாடி செல்லவில்லை எனவும் கூறியுள்ளார்.
தினகரன் விரக்தியின் விளிம்பிலும்,தோல்வியின் விளிம்பிலும் இருப்பதால் இப்படி அவதூறு பேசி வருவதாகவும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை நிருபிக்க உரிய ஆதாரம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
டி.டி.விக்கு இந்த அரசில் உரிமை கொண்டாட எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை எனவும் அசாதாரண சூழல் காரணமாக மட்டும் தான் சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டார் எனவும் கூறியுள்ளார்.
பின்னர் டிசம்பர் மாதம் நடைபெறக்கூடிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து விரைவில் அறிவிக்கபடும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment