Sunday, November 5, 2017

அனுபவிக்க மட்டுமே முடியும்............



பூசணிக்காய்
தன்னை தானே
பூசணக்காய் என்று சொல்லுமோ ?
எவன்
தன்னைத் தானே குரு என்கிறானோ
அவன் 
குரு இல்லை
இது வரை
எக் குருவும்
இங்கு
பிறந்தது கிடையாது
அது
ஏற்கனவே 
அங்கேயே இருந்த ஒன்று தான்
தன்னை 
ஞானம் பெற்றவனாகவும்
மற்றவர்களை
அறிவிலியாகவும் நினைப்பவன்
ஞானமே பெற்றிருக்க மாட்டான்
உண்மையான ஞானியை
நீங்கள் ஒரு போதும்
காண முடியாது
அதை
அனுபவிக்க மட்டுமே முடியும்
இங்கு
ஆளுக்கு ஆள்
கத்தியை எடுத்து
சவரம் செய்கிறார்கள்
ஒருவன் கண்டேன் என்கிறான்
ஒருவன் காணவில்லை என்கிறான்
இரண்டுக்கும் வேறுபாடு இல்லை
உண்மையென்று
நினைப்பது எல்லாம் உண்மையல்ல
பொய் என்று
பிதற்றுவது எல்லாம் பொய்யும் அல்ல
காலின் செருப்பை
யாராவது 
கைககளில் அணிந்து கொள்வார்களா என்ன
மனதும் ஒரு கருவியே
அதை சரியாக பயன்படுத்த வேண்டும்
பண்படுத்த வேண்டும்
நீங்கள் கேக்கும் எதுவும்
என்னிடமில்லை
ஆனாலும்
என்னிடம் அத்தனை பொருட்களும்
இருக்கின்றன
சிறகை பிடித்துக் கொண்டு
பறவையை பிடித்ததாக
பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்
உண்மையான
குண்டலி கிளம்பியவனால்
ஒரு போதும் மீண்டு வர முடியாது
அவனால்
பேச முடியாது 
சில சித்திகளை வைத்தே
கிறுக்குத் தனம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்
சித்தர்கள்
சித்தத்ததை
அடக்கிய நிலையும் 
ஓர் இடைநிலையே
சிதம்பரத்தில்
ஆடுவது தான் பெரு நிலை
சுத்தியலை தேடுபவனுக்கு
ஆணிதான் கிடைக்கும்
ஆணியை தேடுபவனுக்கு
சுத்தியல் கிடைக்கும்
எதையுமே தேடாதவனுக்கு
எல்லாம் கிடைக்கும்
பூரணம் பெற்ற மனிதனிடமிருந்து
எந்த புதிதான சொற்களும் உருவாகமாட்டா
என் கிறுக்கல்களை 
விட்டு விடுங்கள்
எந்த சொற்களையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்
கரு தான் முக்கியமே ஒழிய
கருத்தல்ல.
No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...