Sunday, December 17, 2017

பூஜையறை_டிப்ஸ்!

🌺 ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும் போது சில பூக்கள் காம்பில்லாமல் இருக்கலாம். அதில் எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.
🌺 எலுமிச்சம் பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை பூஜையறையில் போடலாம்.
🌺 மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. மேலும் தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகிற்கு உண்டு.
🌺 பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணைய விடக்கூடாது. பூஜை முடிந்த பின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர் கொண்டு விளக்கை அணைக்கலாம்.
🌺 மணமுள்ள பூக்களால் பூஜை செய்தால் அடுத்த நாள் அந்த மலர்களை வீணாக்காமல் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்தால் மணமுள்ள சீயக்காய் தயாராகிவிடும்.
🌺 மழை நாட்களில், பூஜையறை தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கவும்.
🌺 பூஜையறையின் கதவுகளில் சிறு சிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும் போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.
🌺 ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நிறைய நேரம் எரிந்து மணம் பரப்பும்.
🌺 வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பு, மறு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பது ஐதீகம்.
🌺 காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...