*தெலங்கானா மாநிலத்தில் பிச்சைக்காரர்களை எங்காவது பார்த்தால் அல்லது அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தால் அதைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது*
*பிச்சைக்காரர்களைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு விரையும் அரசு அதிகாரிகள் அவர்களை மீட்டுச் சென்று ஹைதராபாத்தில் இருக்கும் மறுவாழ்வு மையத்தில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள்*
*பிச்சைக்காரர்களை மீட்டு அவர்கள் பிச்சை எடுக்க மாட்டோம் என்று உறுதி கூறியதை தொடர்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கு முன்பு அவர்களது கை ரேகை மற்றும் புகைப்படங்களை அரசு சேகரிக்கிறது*
*ஒருவேளை வெளியே சென்று மீண்டும் அவர்கள் பிச்சை எடுத்துப் பிடிபட்டால் ‘பிச்சை எடுப்பது தடுப்பு சட்டம் 1977’ இன் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிய பட்டு ஆறு மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது*.
நம்ம ஊரில் சட்டத்தைப் போடுகிறவனே பெரிய பிச்சைக்காரனாக இருக்கும்போது யாரைப்பிடித்து சிறையில் போடுவது.
No comments:
Post a Comment