நம்மாளு ஒருத்தன் அமெரிக்கா போனான்.. அங்க எல்லாம் சுத்தி பார்த்துட்டு வந்துட்டு போன நினைவா ஏதாவது வாங்கிட்டு போகலாம் அப்படின்னு ஒரு கடைக்குள்ள போனான்...அங்க ஒரு பெரிய எலியோட வெண்கலச்சிலை இருந்துச்சு. பார்த்ததும் அவனுக்கு பிடிச்சி போச்சு..விலை கேட்டான்...
கடைக்காரன் சொன்னான்..."சிலையோட விலை 10 டாலர் .. ஆனா அது பற்றிய கதையோட விலை 100 டாலர்.." அப்படின்னு.
நம்மாளு தான் விவரமானவனாச்சே ....உடனே 10 டாலரை எடுத்து கொடுத்துட்டு, "சிலையை மட்டும் கொடு. கதையை நீயே வச்சுக்கோ" அப்படின்னுட்டு சிலையோட ரோட்டுக்கு வந்தான்....
பின்னாலேயே நாலஞ்சு எலிகள் வந்துச்சு..இவன் கண்டுக்காம போய்கிட்டே இருந்தான்....ஆனா வர வர எலிகளோட எண்ணிக்கை அதிகமா ஆகிகிட்டே போச்சு...ஒரு கட்டத்துல ஆயிரக்கணக்கான எலிகள் இவன் பின்னாலயே வர ஆரம்பிக்கவும், நம்மாளு பயந்துட்டான். பக்கத்துல ஒரு பெரிய கடல் இருந்துச்சு... அது கிட்ட ஓடினான்...ஆனாலும் எலிகள் பின்னலையே தான் வந்துச்சுக. வேற வழி தெரியாம இவன் அந்த எலியோட சிலைய தூக்கி கடல்ல தூரமா எறிஞ்சான்..... என்னா ஆச்சர்யம்...எல்லா எலிகளும் அந்த சிலை பின்னாலையே கடலுக்குள்ள குதிச்சிருச்சுக.
உடனே நம்மாளு கடைக்கி ஓடினான்... கடைக்காரன் நக்கலா பார்த்துட்டு, "என்னா சார்...கதை என்னனு தெரியனுமா?" அப்படினான்...
நம்மாளு ரொம்ப எதிர்பார்ப்போட ஆசை ஆசையா கேட்டான்.......
"அதெல்லாம் வேண்டாம்பா இதே மாதிரி வெண்கலத்தில எங்க ஊரு அரசியல்வாதிகள் சிலை இருக்கா...?"
No comments:
Post a Comment