அந்த பேங்க் திவாலாகப் போகுதாமே?
இந்த பேங்க் வாராகடன் நானூத்தி நாப்பத்தி ஆறு சதவீதம் கூடிடுச்சாமே?
சம்பளப்பணத்தைப் போட்டா கூட திரும்பி வராதாமே?
ஃபேஸ்புக் பொருளாதாரப் புரளிப் புளிகளுக்காக.....
எந்தக் கட்சியின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் படிக்க முடிந்தால் படித்துப் பாருங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில், ரிசர்வ் வங்கி கொடுத்த புள்ளி விபரப்படி, வங்கிகளின் வாராக்கடன் சதவீதங்கள் (NPA) மற்றும் சொத்தின் மூலம் வரும் வருவாய் (RoA - Return of Asset).
அதிகபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக்கடன் 14.32%. அதாவது கொடுத்தக் கடனை வசூலிக்க முடியாமல் தவிப்பது... மீண்டும் வசூலிக்கவும் கொஞ்சம் வாய்ப்புள்ளது. நிர்வாகம் சரியில்லாத காரணத்தால், பெரிய முதலைகளுக்குக் கடனைக் கொடுத்துவிட்டு முழிக்கிறார்கள்.
அதே போல, ரிட்டர்ன் ஆஃப் அசெட் (Return of Asset) என்பதில் மிகவும் மோசமாக இருப்பது, தனலக்ஷ்மி வங்கி (அடைப்புக்குறிக்குள்ளே இருப்பது மைனஸ் என்று அர்த்தம்). தன லட்சுமி வங்கியின் என்.பி.ஏ 3% தான். ஆனால், அந்தச் சொத்தைக் காப்பாற்ற செய்ய வேண்டிய செலவு 1.61%.
வங்கி வாராக்கடன் சதவீதங்கள் (NPA) ரிட்டர்ன் ஆஃப் அசெட் (RoA)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 14.32% (0.97)
தேனா வங்கி - 10.66% (0.75)
யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா - 10.62%. (0.22)
ஐ.டி.பி.ஐ - 9.61%. (1.09)
பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.99%. (0.61)
யுகோ வங்கி - 8.65%. (1.25)
அலகாபாத் வங்கி - 8.65%. (0.33)
சென்ட்ரல் வங்கி - 8.54%. (0.48)
கார்ப்பரேஷன் வங்கி - 7.64%. (0.23)
பேங்க் ஆஃப் இந்தியா - 7.09% (0.94)
கனரா வங்கி - 6.33% (0.52)
தனலட்சுமி வங்கி - 2.9%. (1.61)
(இந்தப் புள்ளி விபரம், சமூக வலைதளங்களில் அந்த பேங்க் திவாலாகப் போகுதாமே, இந்த பேங்க் என்.பி.ஏ 25% ஆக உயர்ந்து விட்டதாமே என்ற தவறானத் தகவல்களுக்கு மாற்றாக)
ஆக, மேலேயிருக்கும் 12 வங்கிகளும் நிர்வாகச் சிக்கலில் இருக்கின்றன. இதற்கொரு தீர்வு சொல்லுங்கள் என்று உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
நிர்வாகிகளை மாற்றுங்கள், கடன் கொடுக்கும், வசூலிக்கும் முறைகளை மாற்றுங்கள் என்று தானே சொல்வீர்கள்? யார் மாற்ற வேண்டும்? ரிசர்வ் வங்கி? அதற்கு வங்கிகளுக்குள் புகுந்து மாற்றம் செய்ய அதிகாரம் இல்லை. அரசாங்கம் நேரடியாக இந்த நிர்வாகச் சீர்திருத்தம் எல்லாம் செய்ய முடியாது. அப்ப என்ன செய்யலாம்? தனியா ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் எல்லா வங்கிகளையும் மிக நெருக்கமாகக் கண்காணிக்கச் சொல்லலாமா? அதைத் தான் இந்த புதிய நிதி மசோதா செய்கிறது.
இந்தப் புதிய நிதித் தீர்வாணையம் அமைந்து விட்டால்,
1) வங்கிகள் தங்கள் வேலை மற்றும் தரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, மொத்தமாகக் கார்பொரேட்களுக்கு அள்ளிக் கொடுத்து டார்கெட் முடித்தால் போதும் என்று அலட்சியமாக இருக்காது.
2) பெரிய முதலாளிகளுக்கு மொத்தமாகக் கொடுத்து ரிஸ்க்கில் மாட்டிக் கொள்வதற்கு பதில், சிறு சிறு நிறுவனங்கள், விவசாயக் கடன், நகைக் கடன் போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கும். (சிறு தொழிலுக்கு அரசாங்க உதவி வேண்டும் என்று நிஜமாகவே விரும்புபவர்களுக்கு இந்த நிதித் தீர்வாணையம் ஒரு மிகப் பெரிய வரம்)
3) ஒவ்வொரு நிதியாண்டிலும் அந்தந்த நிதி நிலையைக் கவனத்தில் கொண்டு அதற்கென ஒரு தரவரிசைப்படுத்தப் படும். தர வரிசையில் கீழே இருக்கும் வங்கி, தன் வங்கியை பிற வங்கியுடன் இணைத்து விடுவார்களே என்று பயந்தும், தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளவும், நிஜமான சேவையை மக்களுக்கு வழங்கும். (மேனேஜர் முன்னாடி பம்மியெல்லாம் உட்காரத் தேவையிருக்காது. சலான் நிரப்பிட்டு எவ்வளவு நேரம்ய்யா நிக்கிறது? ஒழுங்கா சர்விஸ் பண்றியா வேற பேங்குக்குப் போகட்டுமா என்ற தொணியில் ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் பேசத் தொடங்கிவிடுவர்.)
ஆக, வங்கி வேலை என்பது முன்பு போல இல்லாமல் இன்னும் கடினமாகும். டிமானிடைஷேசன் நேரத்தில், என்னய்யா நிர்வாகம் பண்றீங்க? பேங்க் ஸ்டாஃபே ரெண்டாயிரம் ரூபாய்த் தாளை மாத்தித் தர்றான். அதைத் தடுக்க வழியில்லாம கருப்புப் பணத்தை ஒழிக்க வந்துட்டாங்களே என்று கேட்ட புண்ணியவான்கள் தயவில், இந்த புதிய நிதித் தீர்வாணையம் அமைகிறது.
வாழ்த்துகள் மக்களே! இனி உங்களுக்குப் பேங்கிற்குப் போகப் பிடிக்கும். Happy Banking!!!
No comments:
Post a Comment