Saturday, February 3, 2018

மனதை வருத்திய இரண்டு செய்திகள்....

ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில், முக்கிய நுழைவாயிலாக அமைந்த கிழக்கு கோபுரத்தில் தீ விபத்து... வரலாற்று, கலை, புராதன, சமய சின்னங்கள் பற்றிய அறிவு சிறிதும் அற்ற, அற்பர்களால் ஆன அரசாங்கம், அறநிலையத்துறை அதிகாரிகள், இந்த பேரழிவிற்காக நிச்சயமாக வெட்கப்பட மாட்டார்கள்.... நாம்தான் வேதனைப்பட வேண்டாம்.. அரசும், அதிகாரிகளும், இதை சீரமைக்கின்றோம் என்ற பெயரில், இன்னும் எவ்வளவு பொறுக்கி தின்னலாம் என்று இப்போதே திட்டமிட ஆரம்பித்து இருப்பார்
கள்.... மிக கேவலமான ஜந்துக்கள்..
உயர்கல்வியின் தூண்களாக இருக்க வேண்டிய “துணைவேந்தர்” ஒருவர், லஞ்சம் வாங்கியபோது, “கையும்,களவுமாக” கைது...
துணைவேந்தர் பதவியை, ஏலம் விட்டு விற்ற அரசு, அமைச்சர், கவர்னர் ஆகியோர் மட்டும் யோக்கியமா? இவர்கள் கைதாக மாட்டார்களா?
பணம் வாங்கி, தகுதியற்ற பிணந்தின்னிகளுக்கு ஓட்டுப்போட்ட மக்களும், இந்த இழிவுகளுக்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்...
இந்த நாடு, இன்னும் எத்தனை கேவலங்களை சந்திக்க இருக்கிறதோ??? அம்மை மீனாட்சியும், அப்பன் சொக்கநாதனும்தான் காப்பாத்தணும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...