Sunday, August 5, 2018

தோண்டத் தோண்ட ...

இன்னும் இன்னும் பெரிதாகிக் கொண்டே போகிறது அண்ணா பல்கலைக்கழக விவகாரம்..!
மறுபடியும் மறுபடியும் தேர்வாகாத சிலர் "எப்படியாவது" தேர்வாவது அவ்வப்போது நடக்கும்தான்
ஆனால் இங்கே கொடுக்கும் பணத்திற்கேற்ப 94 மார்க் வரை கொடுத்திருக்கிறார்கள்..!
தயாராக அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியலை கைப்பற்றி இருக்கிறார்கள்..!
தேர்வெழுதாமலே பலருக்கு பி எச் டி..!
வாயடைத்து போயிருக்கிறார்கள் கல்வியாளர்கள்..!
யாருக்கு வேண்டுமானாலும் என்ன மதிப்பெண் என்ன பட்டம்.. என்ன பதவி வேண்டுமானாலும் கொடுத்திருக்கிறார்கள்.. பணம் வாங்கிக் கொண்டு..!
ஜெயலலிதா என்ற பொறுப்பில்லாத முதல்வர் நாளின் முழுநேரத்தையும் அறையில் தன்னிலைமறந்து கிடக்க... கொள்ளைக்காரி ஒருத்தி தமிழகம் முழுவதும் எல்லா துறைகளிலும் கொள்ளைப் பிரதிநிதிகளை அமர்த்தி தமிழ் நாட்டையே கொள்ளை அடித்திருக்கிறார்கள்..!
சிலைகடத்தல் கவிதா சசியின் உறவினர்..!
இதோ இந்த உமா எட்டு ஆண்டுகளாக கொடி கட்டிப் பறந்திருக்கிறார்..!
இத்துடன் இது முடியபோவதில்லை..
ஜெயா செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் திறக்கவில்லை ஊழல் என்ற பெருவெள்ளத்தையும் சேர்ந்தே திறந்து விட்டு சென்றிருக்கிறார்..!
___________________
இந்த லட்சணத்தில் இன்னமும் இரும்பு மனுஷி என்று ஜெயலலிதாவை, பெண் கருணாநிதியைச் சிலர் வாழ்த்திப் பேத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஜெயா இல்லாததால் தீய சக்திகள் கிளம்பி விட்டார்களாம்.
உண்மையில்.. ஜெயா என்கிற ஹிட்லர் இறந்து, சசிகலா என்கிற திருடர்களுக்குக் கமிஷன் கொடுப்பவர் ஜெயிலில் இருப்பதால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிவிட்டான்..!
திரு.சூரப்பாவின் தயவால் மேலும் மேலும் குப்பையைத் தோண்டினால் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த.. கோடிகளில் கொடுத்து வைஸ் சான்ஸிலர் ஆனவர்கள் கதைகளும் வெளியே வரும்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...