ஒரு வீட்டில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால்,அந்த வீட்டிலுள்ள வயதான பெண்கள், குழந்தையின் தாயைப்பார்த்துச்சொல்வார்கள். 'ஓமத்தண்ணீர்'
வீட்டில் இருந்தால் கொஞ்சம் கொடு குழந்தைக்கு,அழுவது நின்றுவிடும் என்பார்கள்.சிலநேரம் வயிற்று வலியால் துடிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஓமத்தண்ணீர் சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் போய்விடும்.100 கிராம் ஓமத்தில், ஒரு லிட்டர் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து, அரைலிட்டர் அளவுக்கு காய்ச்சி இறக்கி, சூடு குறைந்தவுடன்
ஒரு குவளை ஓமத்தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட எந்த நோயும் போய்விடும்.பசியைத்தூண்டவும், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகவும், ஓமத்தைப்போல ஒரு மருந்து வேறில்லை.
ஓமத்தில் சூப் வைத்து குடியுங்கள்.உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு கிடைக்கும்.ஓமத்தில் ரசம் செய்து, அதை சூடான சோற்றில் விட்டு, அத்துடன் ஒரு சொட்டு நெய் ஊற்றி சாப்பிட, உடம்பில் உள்ள காய்ச்சல் ஓடிவிடும்.ஆஸ்துமா நோயால் அவதிப்படுவோர் ஓமத்தண்ணீர் குடித்துவர, நோய் குணமாகும்.
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டுவலி குணமாகும்.
மார்பில் சளி இருந்தாலும், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவி வந்தால்
நோய் குணமாகும்
பல்வலிக்கும் ஓம எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவினால் குணமாகும்.
நெஞ்சுச்சளி வெளியேற,
கொஞ்சம்
ஓமப்பொடி, உப்பு ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால் பிணிநீங்கும்! நலமோடு திகழ, நாளெல்லாம் ஓமத்தை நினைவில் கொள்வோம்! நல்லதொரு சிந்தனையோடு!

No comments:
Post a Comment