Saturday, August 11, 2018

வடிவேலுக்கு யாரும் போட்டியாக முடியாது...😂😂😁

அறிஞர் அண்ணா திடீர்னு இறந்துட்டாரு. கையும் ஓடல. காலும் ஓடல. ராஜாஜி ஹால்ல திமுக தலைவர்களெல்லாம் கூடியிருக்காங்க. அடுத்த முதல்வர் யாருன்னு ஒரே குழப்பம். ஒருத்தன் நெடுஞ்செழியன்னு சொல்றான். இன்னொருத்தன் மதிவாணன்னு சொல்றான். ஒருத்தன் எம்ஜிஆர்தான் வரணும்னு சொல்றான்.
யாரை முதல்வ்ரா தேர்ந்தெடுக்கணும்னு எல்லாருக்கும் ஒரே குழப்பம். 43 மணி நேரம் பேசியும் இவங்களால எந்த முடிவும் எடுக்காததால இறுதி முடிவை சீமான் எடுப்பார்னு ஒரு தீர்மானம் போட்டுட்டாங்க.
அந்த நேரம், நான் ரஷ்ய அதிபர், ப்ரெஸ்னேவ் ஒரு முக்கியமான விஷயத்துக்கு விடை தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்ததால மாஸ்கோவுக்கு போயி அந்த பிரச்சினையை தீத்து வைச்சிட்டு, அமெரிக்காவுல, அணுகுண்டு சோதனை நடத்தலாம்னு ஒரு வாரம் டூர் போயிருந்தேன்.
திடீர்னு தமிழ்நாட்டுல இருந்து போனு. என்ன்னு கேட்டா இந்த மாதிரி விபரத்தை சொல்றாங்க. சரின்னு பக்கத்துல இருந்த கடல்ல ஒரு திமிங்கலத்தை புடிச்சி, அது மேல உக்காந்து, மெரினாவுல வந்து இறங்கறேன். திமிங்கலத்தை தட்டிக் கொடுத்து, கடல்ல திரும்ப விட்டுட்டு, நேரா ராஜாஜி ஹால் போறேன்.
தமிழ்நாட்டுக்கு இருந்த ஒரே அண்ணா போயிட்டாரு. அடுத்த அண்ணனா நீங்க பதவியேக்கணும்னு எல்லா திமுக தலைவர்களும் அழுகுறாங்க. நான் முடியவே முடியாது. திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவேன்னு சொன்னேன். சரி. நீங்க தலைமை பொறுப்பை ஏத்துக்கலன்னா பரவாயில்ல. அடுத்த முதல்வரையாவது தேர்ந்தெடுங்கன்னு சொன்னாங்க.
அப்போ நான் கை காட்டு நபர்தான் கருணாநிதி.
நான் சொல்றது உண்மை.
ஏன்னா நான் சத்தியத்தின் பிள்ளை.
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...