Wednesday, February 20, 2019

அ.தி.மு.க., மெகா கூட்டணி... மக்கள் என்ன சொல்கிறார்கள்.

இது முரண் கூட்டணிகே.கவிப்பிரியா, உதவி பேராசிரியர், மதுரை:இந்த கூட்டணி முரண்பாடாகதான் உள்ளது. தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் இது போல கூட்டணி அமைப்பது இயல்புதான். ஆனால் கொள்கை கோட்பாடுகளை அதிகம் பின்பற்றும் ராமதாஸ் இக்கூட்டணியில் இணைந்திருப்பது ஆச்சரியம். பா.ம.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் எந்த அளவிற்கு கருத்துக்கள் ஒத்துப்போகும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க., - அ.தி.மு.க., உறவு பலமாக இருப்பதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இதன் மூலம் பா.ஜ., தமிழகத்தில் தன் கிளையை பரப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. இதே நேரம் ஜெ., இருந்திருந்தால் இப்படி ஒரு கூட்டணி அமையுமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.கூட்டணி இன்றியமையாததுஏ.சுமதி, குடும்பத்தலைவி, மதுரை: கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்திப்பது தவிர்க்க முடியாதது. பல விஷயங்களில் ஒத்த கருத்து மற்றும் கொள்கைகள் கொண்ட பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்ததில் வியப்பு ஏதும் இல்லை. மத்திய, மாநில அரசுகளிடையே சுமூக நிலை நிலவினால் மட்டுமே மாநிலத்திற்கு பயன்கள் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் தமிழக அரசு சுமூகமாக இருந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைத்தன. எம்.ஜி.ஆர்., ஜெ., வழியில் தற்போதைய முதல்வரும், துணை முதல்வரும் தேசிய கட்சியான பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளது இரு கட்சியினர் மட்டுமின்றி இக்கூட்டணியில் இடம் பெறப்போகும் மற்ற கட்சியினரிடமும் உத்வேகத்தை ஏற்படுத்தும். மக்களும் இக்கூட்டணியை ஏற்க வாய்ப்புள்ளது.ஓட்டாக மாறுமா கவிதா, இல்லத்தரசி, மதுரை: அ.தி.மு.க., என்றாலே ஜெயலலிதா என்ற ஆளுமை தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்தார். முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அந்த அளவிற்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என தெரியவில்லை. இத்தேர்தலிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன் நிறுத்திதான் அ.தி.மு.க., பிரசாரம் செய்யும்.தமிழகத்தில் தற்போதைய இளைஞர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதேநேரம் பிரதமர் மோடி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு பல இலவச திட்டங்களை அள்ளி வீசுகின்றது. பணமாகவும் வழங்குகிறது. இதெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா என தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும்.சந்தர்ப்பவாத கூட்டணிஆர்.பாலசுந்தரம், வியாபாரம், திண்டுக்கல்: வார்த்தைக்கு வார்த்தை 'தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது' என சொல்லி வந்தவர் ராமதாஸ். இதையே அவரது மகனும் தெரிவித்தார். அ.தி.மு.க., பட்ஜெட் தாக்கல் செய்தபோது, போட்டிக்கு நிழல் பட்ஜெட் தாக்கல் செய்தார். அ.தி.மு.க., அரசை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, அவர்களுடனே கூட்டணி வைத்தது ஆச்சர்யமாக உள்ளது. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.ராஜதந்திர முடிவு டி.முருகராஜ், கட்டட ஒப்பந்ததாரர், தேனி: பா.ம.க.,வை தி.மு.க., நழுவ விட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,- 5, பா.ம.க.,- 7 என ஒதுக்கப்பட்டது சற்று தாராளமாகவே உள்ளது. ஆனால் இடைத்தேர்தல் நடக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கும் என்ற திட்டம், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி எடுத்திருக்கும் ராஜதந்திர முடிவு என்றே சொல்லலாம். ராகுல், விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற ஆயுதத்தை தேர்தலில் பயன்படுத்துவார். இது பெரிய அளவில் பலன் அளிக்கும். அதை சமாளிக்க தே.ஜ., கூட்டணி எந்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.தமிழகத்திற்கு நல்லது நடக்கும்எல்.சுவக்கின், வர்த்தகர், ராமநாதபுரம்: அ.தி.மு.க., ஆளும் கட்சியாக உள்ளது. இதனுடன் வட மாவட்டங்களில் ஓட்டு வங்கி உள்ள பா.ம.க., பா.ஜ., புதிய தமிழகம், ஐ.ஜே.கே., கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது வெற்றிக்கூட்டணியாக அமைந்துள்ளது. தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும், லஞ்சம், ஊழலற்ற மத்திய அரசு அமைய ஏதுவான கூட்டணியாக உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் மாநில அரசால்தான் தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும். இதனை இந்த மெகா கூட்டணி நிறைவேற்றும்.நிரந்தர நண்பனும் எதிரியும் இல்லைஎம்.கண்ணன், எல்.ஐ.சி., முகவர், காரைக்குடி: ஜெ., மறைவுக்கு பின் அ.தி.மு.க., செல்வாக்கு சரிந்து வரும் வேளையில் பலத்தை நிரூபிக்க கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க., அரசை விமர்சித்து வந்த பா.ம.க., தற்போது கூட்டணியில் இணைந்துள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கான உதாரணம். பா.ஜ.,வை பொறுத்தவரை தமிழகத்தில் எதிர்ப்பான நிலைப்பாடே உள்ளது. இக்கட்சியுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது பின்னடைவே. இதையும் மீறி பணபலம், சொல் பலம், அரசியல் பலம் வெல்லலாம். அ.தி.மு.க., - பா.ம.க., பா.ஜ., கூட்டணி அக்கட்சியின் ஓட்டை ஒருங்கிணைக்குமே தவிர மக்களின் சிந்தனையை அல்ல. எதையும் சிந்திக்கும் நிலையில் தற்போது மக்கள் இல்லை; தேர்தல் வருகிறது ஓட்டளிக்க வேண்டும் என்ற நிலைப்பாடே உள்ளது.அதிக இடங்களில் வெற்றிஎன். விஜயகண்ணன், லாரி உரிமையாளர், விருதுநகர்: அ.தி.மு.க.,-- -பா.ஜ., கூட்டணி எதிர்பார்த்ததுதான். பா.ம.க., இணைந்திருப்பது மெகா கூட்டணியாகி விட்டது. இக் கூட்டணி அமைவதற்கு முன் தி.மு.க., வலுவாக இருந்தது போன்ற தோற்றம் இருந்தது. மெகா கூட்டணியால் தி.மு.க.,விற்கு பாதிப்புதான். இக் கூட்டணி பெற்ற பழைய ஓட்டுக்களை கணக்கிட்டால் வெற்றி கிடைக்கும் என அறியலாம். பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை சிரமமாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கானது என உணர துவங்கி விட்டனர் மக்கள். ஜி.எஸ்.டி., வரியால் ஆரம்பத்தில் தொழில் முடங்கி இருந்தது. படிப்படியாக தொழில் மேம்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் லிட்டர் ரூ.78 வரை உயர்ந்தது. தற்போது ரூ.73 ஆகத்தானே உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பிரதமர், முதல்வர் வழங்கும் நிதிஉதவி, கிராமங்களில் ஓட்டுக்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதுபோன்ற காரணிகளால் அ.தி.மு.க., பா.ஜ.,கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...