“மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெற வாய்ப்புள்ளது” என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.கரூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேர்தல் சமயத்தில் உண்டாகும் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது அல்ல. அந்தந்த கட்சிகளுக்கு தனி கொள்கைகள் உண்டு. இது எதிரிகளை வீழ்த்தி தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பதற்காக அமைக்கப்படும் கூட்டணி. 2014ல் தனித்து போட்டியிட்டு 37 இடங்களிலும், 2016 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெற வாய்ப்புள்ளது. இது பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment