ஒரு இந்திய சன்னியாசியை வெள்ளையர்கள் கடுமையாக கேலி செய்தார்கள். அவரோ அதனை கண்டுக் கொள்ளவே இல்லை. அவர்கள் மேன் மேலும் கேலி செய்து சன்னியாசிக்கு கோபத்தை தூண்ட முயன்றனர்.
சன்னியாசி அசரவே இல்லை. பொறுமை இழந்த வெள்ளையர்கள், "உனக்கு சொரணையே இல்லையா? உன்னை இவ்வளவு திட்டு திட்டினோம் நீ உன்பாட்டுக்கு இருக்கிறாயே" என்று கேட்டனர்.
அதற்கு அந்த சன்னியாசி தன் கையில் இருந்த பிச்சைப் பாத்திரத்தை எடுத்து, "இதை வாங்கி கொள்ளுங்கள்" என்றார்.
ஆனால் வெள்ளையர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர்.
சிரித்தப்படி சன்னியாசி சொன்னார், "நான் கொடுத்த பொருளை நீங்கள் வாங்காததால் அது இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது. அதுப்போல் உங்கள் வசவு சொற்களை நானும் வாங்கவில்லை அது உங்களிடமே இருக்கிறது" என்றார்.
நாம் அனுமதிக்காத வரை எவரின் எந்த எதிர்மறை விமர்சனமும் நம்மை ஏதுவும் செய்ய முடியாது.......
நான் அந்த #சன்னியாசின்னு சொல்ல வரல....
ஆனா.....
No comments:
Post a Comment