பெண்கள் உடல் சார்ந்த சில நோய்களையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் அதனால் அதிகரிக்கும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அப்படி பெண்கள் சந்திக்கும் சில நோய்களில் சினைப்பை புற்றுநோயும் ஒன்று. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கும் குணம் கொண்டது புற்றுநோய்.
அப்படி பல்வேறு வகைகளும், பெயர்களும் கொண்ட புற்றுநோய்களில் பாலினம் சார்ந்து தாக்கும் புற்றுநோய்களும் சில உண்டு. குறிப்பாக, பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள். இதில் பெண்களின் உயிரையே பறிக்கும் அளவு அச்சுறுத்தும் காரணியாக சினைப்பை புற்றுநோய் உலக அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான சினைப்பை புற்றுநோய், சினைப்பையின் புற உறை காரணமாக வருகிறது. சில தீவிர நிகழ்வுகளில் இடுப்பறைக்குள் உள்ள பிற உறுப்புகளான அண்டக்குழாய், கருப்பை, சிறுநீர்பை, பெருங்குடல் போன்ற இடங்களுக்கும் பரவகாரணமாகிறது .
சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்?
சினைப்பை புற்றுநோயை விளைவிக்கக்கூடிய காரணிகளில் குடும்ப வரலாறு(Family history) முக்கிய பங்கு வகிக்கிறது. நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.
மரபியல் காரணியாக, BRCA1 மற்றும் BRCA2 வகை மரபணு மாற்றம் ஏற்படும் பெண்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் வரை இருக்கிறது. பொதுவாக, 65 வயதுக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொண்ட பெண்கள் மற்றும் மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் சினைப்பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது.
இதுதவிர, பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாகிறது. சினைப்பை புற்றுநோய்க்கான தோற்றங்களும், அறிகுறிகளும் ஆரம்ப நிலையில் அடிக்கடி மறைந்து விடும் தன்மையுள்ளவை அல்லது மிக நுட்பமாகவும் தோன்றலாம். இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது, காலம் கடந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.
இடுப்பு வளையத்தில் வலி, முதுகு வலி, உடலுறவின்போது வலி, உடலின் கீழ் பகுதியில் வலி ஆரம்ப நிலையில் தோன்றும் அறிகுறிகள்.புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கும். எப்பொழுதும் உப்புசமாக இருப்பதாக உணர்தல், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் நலமற்று உணர்தல், வீக்கமான வயிறு, சிறிது உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு அல்லது பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை அல்லது சிறுநீரை வழக்கத்துக்கு மாறாக கட்டுப்படுத்த முடியாமை, மூச்சுத்திணறல் போன்றவையின் மூலம் கண்டுகொள்ளலாம்.
சினைப்பை புற்றுநோய் இருப்பதை பரிசோதனையில் எப்படி கண்டுபிடிப்பார்கள்?
முதலில் CA125 என்ற புரதத்தின் அளவை பரிசோதனை செய்து, பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது. பரிசோதனையின் முடிவுகள் சினைப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தால் நோயாளி ஒரு மகளிர் நலவியல் புற்றுநோய் நிபுணரை அணுகி, மற்ற பல தேவையான பரிசோதனைகளையும் கண்டறியும் முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சினைப்பை புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன?
சினைப்பை புற்றுநோய் சிகிச்சைக்கான வழிமுறைகள் நோயின் தன்மை மற்றும் பாதிப்பு சார்ந்து இருக்கும். புற்றுநோய் நிபுணர் ஒற்றைமுறை அல்லது பல்வேறு சிகிச்சை முறைகள் இணைந்த ஒரு சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது பொதுவான அணுகுமுறை.
சில தீவிர நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கர்ப்பப்பை, அண்டக்குழாய், கருப்பை, கருப்பை. அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதிருக்கும். இது முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று அறியப்படும். கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு குறிப்பாக கார்போப்ளாடின் மற்றும் பாக்லிடாக்செல் ஆகிய மருந்துகளின் கலவை நரம்புகள் ஊடாக செலுத்தப்படும்.
புற்றுநோய் அணுக்களுக்கு ஈஸ்ட்ரோஜென் கொண்டு செல்லப்படுவதை தடுத்து அவற்றின் வளர்ச்சியை குன்றச்செய்ய ஹார்மோன் சிகிச்சை சேர்த்து செய்யலாம்.இனப்பெருக்க அமைப்பில் புற்றுநோய் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சில சமயங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்தலாம், அனால் அதை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது!

No comments:
Post a Comment