Wednesday, February 27, 2019

`வாரிசுகளுக்கு சீட்; ஒருங்கிணைந்த அ.தி.மு.க; சசிகலா சந்திப்பு!' - திவாகரன் முயற்சிகளுக்குத் தடைபோடும் தினகரன்.

பிரிந்து கிடப்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்தால் மட்டுமே, முழுமையான அண்ணா தி.மு.க-வாக மாறும்; மக்கள் மத்தியிலும் நம்பிக்கையைப் பெற முடியும்' என்பதை பியூஷ் கோயலிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறோம்.

`வாரிசுகளுக்கு சீட்; ஒருங்கிணைந்த அ.தி.மு.க; சசிகலா சந்திப்பு!' - திவாகரன் முயற்சிகளுக்குத் தடைபோடும் தினகரன்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்தி, அ.ம.மு.க-வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் திவாகரன். `இப்போதுள்ள அ.தி.மு.க-வை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒருங்கிணைப்பு நடந்தால் வெற்றி பெறலாம்' என டெல்லி மேலிடத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் திவாகரன். 
நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க தலைமையிலான அணியில் பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. `தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' எனத் தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `இந்தக் கூட்டணிக்குள் தி.மு.க-வில் உள்ள தோழமைக் கட்சிகளும் இணையலாம். அது யார் என்பது பரம ரகசியம்' எனப் பேசியிருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிரான மெகா கூட்டணியாக அ.தி.மு.க அணியைக் காட்டும் முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், தினகரனோடு மோதிக்கொண்டிருக்கும் திவாகரனும் அ.தி.மு.க-வுடன் இணைவது தொடர்பாக டெல்லி வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். கடந்த 25-ம் தேதி மன்னார்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினார் திவாகரன்.
திவாகரன்
அந்த மேடையில் பேசியவர், `எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகக் கூவத்தூரில் கஷ்டப்பட்டது எல்லாம் நம்முடைய மன்னார்குடி பிள்ளைகள்தான். என்னைச் சுற்றி சில நந்திகளும் இருந்தன. அதெல்லாம் இப்போது நகர்ந்துவிட்டன. எனக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். அவர் சிலரை நம்பி கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறார். இதுவரை அரசியல் பின்னணியில் இருந்தேன். நான் ஃபீல்டுக்கு வராமல் இருந்தது என் தவறு. இப்போது லேட்டாக வந்து இருக்கிறேன். ஆனால், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன். இப்போது அரசியலில் ஜீரோவிலிருந்து தொடங்கினாலும் விரைவில் உயரத்தை எட்டிப் பிடிப்போம்' என நம்பிக்கையோடு பேசினார். 
ஜெய் ஆனந்த், பியூஷ் கோயல்
திவாகரனின் `திடீர்' உற்சாகம் குறித்து, அண்ணா திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம். ``மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அதேநேரம், இந்தத் தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுப்பதைவிட, அமைச்சர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கும் வேலைகள்தான் நடக்கப் போகிறது. தேர்தலில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தங்கமணியின் மகன், ஜக்கையனின் மகன் என வாரிசுகள்தான் கோலோச்சப் போகிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் வெறுப்பைத்தான் விதைக்கும். ஜெயலலிதா இருந்தவரையில் அடிமட்டத் தொண்டர்களில் யார் எம்.பி ஆவார்கள், யார் எம்.எல்.ஏ ஆவார்கள் என யாராலும் கணிக்க முடியாது. இப்போதுள்ள அண்ணா தி.மு.கவை வைத்து தேர்தலில் முழுமையான வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி, டெல்லி பா.ஜ.க தலைவர்களிடமும் இருக்கிறது. `பிரிந்து கிடப்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்தால் மட்டுமே, முழுமையான அண்ணா தி.மு.க-வாக மாறும்; மக்கள் மத்தியிலும் நம்பிக்கையைப் பெற முடியும்' என்பதை பியூஷ் கோயலிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறோம்" என்றவர்கள், 
திவாகரன், நடராசன்
``அ.தி.மு.கவுக்கு மாற்றாக தற்காலிக நிவாரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் தினகரன். இதே அ.ம.மு.க-வில் தொடர்ந்து பயணிப்பது சசிகலாவின் நோக்கம் அல்ல. ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குத் தினகரன் தடையாக இருக்கிறார். சசிகலாவும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவும் அ.தி.மு.க-வில் தொடர்வதைத்தான் விரும்புகின்றனர். இத்தனை ஆண்டுக்காலம் உழைத்த கட்சியைவிட்டுவிட்டு, அ.ம.மு.க என்ற புதிய அமைப்பில் இணைந்து பயணம் செய்வதற்குத் தொண்டர்களும் விரும்பவில்லை.
இதுதொடர்பாக பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் பேசியபோது, `தேர்தலில் இணைந்து பணிபுரிய நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்குத் தேவையானது எல்லாம், டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான். ஓ.என்.ஜி.சி-யின் திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் அரசாங்கத்தால் கையொப்பமிடப்பட்டவை. அவற்றை நீங்கள் செயல்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதைப் போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை' எனத் தெரிவித்தோம். தொடர்ந்து பேசும்போது, `அ.தி.மு.க-வில் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டுக்கோப்போடு கழகத்தை வழிநடத்த முடியும். இந்த முயற்சிகளுக்கு திவாகரன் உறுதுணையாக இருப்பார்' எனக் கூறினோம். இந்தக் கருத்துகளை பியூஷ் கோயலும் உள்வாங்கிக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் சீட் வாங்குவது எங்கள் நோக்கம் அல்ல. ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வாகச் செயல்படவே விரும்புகிறோம்" என்கின்றனர் நிதானமாக. 
சசிகலா
``சசிகலாவுக்கும் திவாகரனுக்கும் இடையில் உரசல்கள் இருந்தாலும், சிறையில் சந்தித்துப் பேசி சமரச உடன்பாட்டுக்குக் கொண்டு வரவும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்திக்க மனு போட்டுள்ளனர். தொடர்ந்து 2 நாள்களாக 5 மணி நேரம் காத்திருந்தும் சசிகலாவைச் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. `கையொப்பமிட்ட வழக்கறிஞர்கள் (Signed Advocates) மட்டுமே சசிகலாவைச் சந்திக்க முடியும்' எனக் கூறி, தினகரன் ஆதரவாளர்கள் தடை போட்டுவிட்டனர். `சசிகலாவை யார் சந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும்?' என்பதைக் கூட தினகரன்தான் முடிவு செய்கிறார். சொல்லப் போனால், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு இரும்புத் திரையைப் போட்டு வைத்திருக்கிறார் தினகரன். அவரைத் தாண்டி யாராலும் சசிகலாவைச் சந்திக்க முடியாது. அ.தி.மு.க-வோடு ஒருங்கிணைந்து செயல்படும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் திவாகரன். தேர்தல் நெருக்கத்தில் இந்த முயற்சிகள் இறுதி வடிவத்தை எட்டும்" என நம்பிக்கையோடு பேசுகின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...