கடந்த 10 தினங்களுக்கு முன் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உடனே அறிவித்தார் அதன்பிறகு இரண்டு மூன்று நாட்களாக ஏன் இன்னும் பதில் தாக்குதல் நடக்கவில்லை என நமது தமிழகத்தில் உள்ள ஆர்வக் கோளாறுகள் பலரும் முகநூலில் கேள்விகள் கேட்டு கிண்டலடித்து வந்தது அனைவருக்கும் தெரியும் இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று முப்பது மணி முதல் மூன்று 55 மணி வரை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அதாவது எல்லைக்கு அப்பால் 50 கிலோமீட்டர் தூரம் ஊடுருவிச்சென்று நமது விமானப்படை ஒரு திறமையான துல்லியமான தாக்குதலை நிறைவேற்றிவிட்டு வெற்றிகரமாக திரும்பி வந்துள்ளது இது ஏதோ ஒரு நாள் முடிவில் ஒரு விமான படையினரால் மட்டும் சாத்தியமானதல்ல இதன் பின்னணியில் நமது உறவுகள் அன்னிய மண்ணில் இயங்கும் ரா மற்றும் நமது விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் பங்கும் மிக முக்கியமானது கடந்த 10 தினங்களுக்கு முன்பு பிரதமர் முழு அதிகாரத்தை படைகளிடம் வழங்கி விட்டோம் என்று கூறிய பிறகு நமது முப்படைகளும் சேர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி நடத்துவது குறித்து மிக விரிவாக ஆராய்ந்து ஒரு திட்டத்தை இன்று செயல் படுத்தி இருக்கிறார்கள் இதனை சற்று விரிவாகப் பார்ப்போம்
முதலில் இன்று நாம் கேள்விப்பட்ட செய்திகள் இன்று அதிகாலை மூன்று முப்பது மணிக்கு நமது இந்திய விமானப்படை மூன்று இலக்குகளில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமையகத்தை மிகத்துல்லியமாக ஆயிரம் கிலோ எடை கொண்ட குண்டு குண்டு தரைமட்டமாக்கி வெற்றிகரமாக திரும்பியுள்ளனர் இதில் சிறிது சிறிதாக வெளிவரும் தகவல்கள் இனி படிப்படியாக வருகின்ற அதன்படி பார்க்கும்போது தாக்குதலுக்கான திட்டம் வழங்கப்பட்டது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் அமைச்சரவை தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரம் முன்னதாகவே விவாதித்ததாக தெரிகிறது
அதே சமயத்தில் தாக்குதல் நடக்கப்போவதை திசைதிருப்புவதற்காக நமது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தரைப்படைகள் மிக அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் இதன்மூலம் காஷ்மீர் வழியாக தரை வழியாக மீண்டும் ஊடுருவல் தாக்குதல் நடக்கும் என்ற ஒரு பிம்பத்தை தோற்றுவித்து இதற்காக பாகிஸ்தான் ராணுவம் தங்கள் எல்லையில் இருந்த தீவிரவாதிகளை எல்லைப் பகுதியில் இருந்தால் தாக்கி விடுவார்கள் என்று நினைத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள முசாபராபாத் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைமையிடத்தில் கொண்டுசென்ற சேர்த்துள்ளனர் இவ்வளவு தூரம் ஊடுருவி வந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்யமுடியாது தரைப்படைகள் என்பது அவருடைய எண்ணம் இதனை உணர்ந்த நமது பாதுகாப்பு படைகள் சென்ற முறை சர்ஜிகல் ஸ்டார் strike செய்துவிட்டோம் இம்முறை அது பலனளிக்காது என்பதால் மாற்று உத்தியாக மிகவும் தைரியமாக செலவினங்கள் பற்றி கவலைப்படாமல் கடுமையான இறப்பினை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஏற்படும் என்பதற்காக விமானப்படையை களமிறக்கியுள்ளது நானே சில நாட்களுக்கு முன் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன் தாக்குதல் நடந்து இருக்கும் இந்த சூழலில் பாகிஸ்தானிய படைகள் மிகவும் விழிப்புணர்வுடன் போதுமான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கும் எனவே இந்திய இராணுவம் பதில் தாக்குதல் நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது நடத்தினால் இறப்பு கடுமையானதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன் அதனை பொய்யாக்கும் விதமாக என்னதான் உங்களுடைய பாதுகாப்பு திறமையாக இருந்தாலும் எங்களால் உங்கள் நாட்டிற்கு ஊடுருவி எதையும் செய்ய முடியும் என்பதை இந்திய விமானப்படை என்று நிரூபித்துள்ளது இந்த தாக்குதலுக்கு 12 மிராஜ் வகை விமானங்கள் மற்றும் நான்குக்கும் மேற்பட்ட சுகோய் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது உடன் அமெரிக்காவிலிருந்து தற்பொழுது வாங்கப்பட்டு இருக்கிற ஆளில்லா உளவு விமானம் ட்ரோன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன இந்த தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் மீது பறந்து முசாபராபாத் நகரில் மேற்படி முகாம்களில் ஆட்கள் இருக்கிறார்களா யார் இருக்கிறார்கள் என்பதனையும் அங்கிருந்து வெளியாகும் ரேடியோ அலைகளை கிரகித்து அதாவது வயர்லெஸ் வழிமறித்து தகவல் அறிந்து இந்தியாவிற்கு அனுப்பியது இந்த இடத்தில் தான் நமது இஸ்ரோவின் கரங்கள் செயல்படுதல் எதிரி நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இலக்கை தொடர்ந்து கண்காணிப்பது என்பது மிகவும் சிரமமான செயலாகும் அந்த செயலை இஸ்ரோ மிகச் சிறப்பாக செய்து முடித்து விடும் அந்த பகுதியில் தான் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தகவல் அறிந்த பிறகு நமது மிராஜ் ரக விமானங்கள் தாக்குதலுக்கான ஆயுதங்களை எடுத்துச் சென்றிருக்கிறது துணை பாதுகாப்புக்காக நவின சண்டை விமானமான அதாவது வழிமறித்துத் தாக்கும் ரக விமானங்கள் சுகோய 31் ரக விமானங்கள் உடன் சென்றிருக்கின்றன முசாபராபாத் மீது முதல் இடத்தில் தாக்குதல் நடந்ததும் தயாராக இருந்த பாகிஸ்தானின் விமானப்படையின் அமெரிக்க சப்ளையான fz16 ரக விமானங்கள் எதிர் தாக்குதலாக விரைந்துள்ளனர் இவையும் ஒரு வழிமறித்துத் தாக்கும் சண்டை விமானங்கள் ஆகும் இவற்றை சாதாரணமாக மிராஜ் விமானங்கள் எதிர்த் தாக்குதல் நடத்த முடியாது என்பதால் அவை பல்வேறு ஒளி குறிப்புகளை ஆகாயத்தில் ஏற்படுத்துவதன் மூலம் தங்களை நோக்கி வரும் ஏவுகணைகளை திசைதிருப்பி மற்றும் எப் 16 ரக விமானங்களின் கவனத்தை திசை திருப்பி ஏமாற்றிக் கொண்டு சில நிமிடங்கள் சமாளித்து கொண்டிருந்தபோது சுகோய் ரக விமானங்கள் mirage வகைகளை பாதுகாப்பதற்காக பறக்கின்றன அவர்களை பார்த்ததும் fz16 ரக விமானங்கள் தாங்கள் இதற்கு ஈடு கொடுக்க முடியாது என்பதனை உணர்ந்து படையணிக்கு திரும்பிவிட்டன ஆனால் பாகிஸ்தான் கூறுகிறது எமது விமானப்படையின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்தியா விமானப்படை திரும்பிச் சென்றுவிட்டது என்று அதே சில நிமிடங்கள் கூறுகிறார்கள் அவர்கள் எங்கள் எல்லைக்குள் புகுந்து விட்டார்கள் இது எல்லை கட்டுப்பாட்டை மீறிய செயல் எங்கள் நாட்டின் காட்டுப் பகுதியில் குண்டுகளை வீசி சென்று இருக்கிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள் ஒன்று அவர்கள் தாக்குதலை மறுக்கிறார்கள் அதன்பிறகு சில நிமிடங்களில் தாக்குதலை கண்டனம் செய்கிறார் இந்த இரட்டை நிலையிலிருந்து இந்த தாக்குதல் நடந்தது உண்மை என்பதை தெரிகிறது ஆனால் இழப்புகளைப் பற்றி நமது தமிழகத்தைச் சேர்ந்த சில்லறை ஊடகங்கள் ஆதாரம் எங்கே என்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றன அதுவும் எதிரி நாட்டின் மீது நடத்திவிட்டு அவற்றிற்கு ஆதாரங்களை எங்கிருந்து தேடுவது உடனடியாக இனிமேல் இஸ்ரோ தன்னுடைய செயற்கைக்கோள்கள் மூலமாக மேற்படி தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை புகைப்படம் எடுத்து அதில் நமக்கு தேவையான விஷயங்களை மட்டும் பிரித்து அரசுக்கு அனுப்பிய பிறகு அரசாங்கம் அந்த அடையாளங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து எது நமது பாதுகாப்புக்கு பாதிப்பில்லாமல் இருக்குமோ அவற்றை மட்டும் வெளியிடுவதுதான் பாதுகாப்பு விதிமுறையாகும்
மிராஜ் வகை விமானங்கள் மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியவை அதாவது தன்னுடைய வேகத்தை சாதாரணமாக மக்கள் உணர விரிவாகக் கூற வேண்டும் இந்த விமானத்தின் ஒளியை மனிதர்கள் கேட்டு உணரும் பொழுது அது தன்னுடைய இலக்கை தாக்கி விட்டு சில கிலோமீட்டர் தாண்டி கண்ணுக்கு மறைந்துவிடும் அதாவது பகலிலேயே இந்த விமானங்கள் பறக்கும்போது கண்ணில் நாம் பார்ப்பது அவ்வளவு எளிய விஷயம் இல்லை இரவில் மிகக் கடினம் அதே சமயத்தில் சுகோய் ரக விமானங்கள் இதை வைத்து பார்க்கும்போது மிகவும் சத்தம் குறைவானவை நாம் தற்போது ஆகாயத்தில் விமானங்கள் பறக்கும் போது எந்தவிதமான இரைச்சலை கேட்கிறோமோ அவ்வளவு சத்தம்தான் வரும் சுகோய் 31 வகை விமானங்கள் தீவிரவாதி அல்லது தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உணர்வதற்கு முன்னதாக இவை விரைந்து தாக்குதல் நடத்தி வருவதால் இவற்றை இவற்றின் தாக்குதலில் இருந்து தப்புவது தரை படைகளுக்கும் அல்லது தீவிரவாதிகளுக்கு எளிய விஷயமல்ல இதனால் சுதாரிக்கும் முன்னதாகவே நடத்தப்பட்ட தாக்குதல் நிச்சயமாக தீவிரவாதிகள் தரப்பில் ஆபத்தை உணரும் முன்னே அழிந்து போய் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எப்படியோ மிகச் சிறப்பாக இந்திய ராணுவம் விமானப்படை தங்களுடைய திறமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்திருக்கிறார் இதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தின் ரேடார்களை ஏமாற்றம் திறமை மிகவும் குறிப்பிடத்தக்கது எப்16 வகை மிகத் திறமையானவை என்று இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா மிக தீவிரமாக இருந்தது ஆனால் இன்று சுகோய் ரக விமானங்களை பார்த்ததும் 16 வகை விமானங்கள் திரும்பிச் சென்றுள்ளனர் என்று பார்க்கும் பொழுது 16 வகை விமானங்களன் ் தரம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் அதே சமயத்தில் நமது தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும் ரேடார் தொழில்நுட்பங்கள் மற்றும் அதனை மறுக்கும் ஏமாற்றும் தொழில்நுட்பங்களும் நம்மை வியக்க வைக்கிறது இவை அனைத்தும் இணைந்து தேசத்தின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பான தாக்குதலை நடத்தி வெற்றிகரமாக சிறு சேதமும் இன்றி வந்திருக்கிறார்கள் இதற்காக நமது மிகத்திறமையான விமானப்படையை இந்தியன் என்ற அடிப்படையில் அனைவரும் கட்டாயம் பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்
ஜெய்ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கி ஜே💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
No comments:
Post a Comment