இனி நம்முடைய வேலை ஆரம்பமாகிறது. இந்த முறை அதிமுக+பாஜக+பாமக கூட்டணி வெற்றி பெற வில்லையென்றால் அது தமிழகத்தை மிகப் பெரிய அளவிற்கு பாதிக்கும். மத தீவிரவாதத்தை ஆதரிக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்டம் இங்கு ஆரம்பமாகிவிடும். தமிழகம் இன்னுமொரு காஷ்மீர் என்று ஆகி விடும்.
வெறுமனே மோடி மீண்டும் வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பதில் எந்த பயனும் இல்லை. நம்மால் முடிந்த ஏதேனும் சிறிய ஒரு செயலையாவது அதற்காக செய்தேயாக வேண்டும். ஒரு சிறு கல்லை குளத்தில் எரிந்தால் அது அடுக்கடுக்காக கரை வரையில் அலைகளை உருவாக்கிக் கொண்டே போகும். அது போல நாமும் சமுதாயத்தை மாற்றக் கூடிய உருப்படியான விஷயம் எதையாவது செய்தே ஆக வேண்டும்.
குறைந்த பட்சம் நம்முடைய நெருங்கிய சொந்தங்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் படி செய்ய வேண்டும். ஹிந்துவாக இருந்துகொண்டு, ஹிந்து நெறிகளை போற்றிக் கொண்டு அதே சமயம் ஹிந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு போடுவது தற்கொலைக்கு சமானம் என்பதை நம் சொந்தங்களுக்கு உணர்த்த வேண்டும். கடவுள் நம்பிக்கை உடையவன் முட்டாள் என்று சொல்பவனுக்கு கடவுளை நம்பும் நாம் ஓட்டு போட போகிறோமா, இல்லை ஆன்மீக வாதிகளுக்கு ஓட்டு போடப்போகிறோமா என்பதுவே மக்கள் முன் நாம் வைத்தாக வேண்டிய முக்கியமான கேள்வி. இந்த உணர்ச்சியை இந்த எழுச்சியை நாம் உருவாக்கி விட்டால் போதுமானது. நம் அனைவரின் கடமை அதுவே. அதை ஒழுங்காக செய்து விட்டால் நல்லவர்களின் கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் மோடி பிரதமராக வருவார்.
பெரிய செலவு எதுவும் இல்லாமல், வீதியில் இறங்கிப் போராடாமல், சிறை செல்லாமல் நம்மால் இதை செய்ய முடியும். நம் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு பத்து ஓட்டுக்களையாவது அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வந்தாலே போதுமானது. இது நம் கடமை மட்டுமல்ல; இந்த தேசத்திற்கு நாம் செய்ய வேண்டிய தொண்டு. அடுத்த தலைமுறை இங்கே நிம்மதியாக இருக்க நாம் செய்ய வேண்டிய செயல்.
இதை செய்யவில்லை என்றால் நாமே குற்றவாளிகள்.
No comments:
Post a Comment