Tuesday, February 26, 2019

யதார்த்தம்,கள நிலவரம் .

👆🏿👇🏿👆🏿👇🏿அர்ச்சகர்களுக்கு காணிக்கை தரக்கூடாது என ஒரு வாரமாக அறநிலையத்துறை கோயில்களில் புதியதாக #பலகைவைக்கப்பட்டு வருகின்றது.
மேலோட்டமாக பார்க்கும்பொழுது இது சரி என்றே சிலருக்கு படும்.
ஆனால் இங்கு யதார்த்தம்,கள நிலவரம் என்பது வேறு.
கோயில்களை பற்றி, அர்ச்சகர் பற்றி உண்மை நிலவரம் #இந்துத்துவாதிகளுக்கும் முழுமையாக தெரியாது. நாத்திக திராவிட மனம் கொண்டோருக்கு புரியவே புரியாது.
1) முதலில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார், பூசாரிகள் போன்றவர்களை அர்ச்சகர்கள் என வரைமுறைப்படுத்தி இவர்களை கோயில் பணியாளர்கள் என கொண்டுவருவது முதல் #மாபெரும்மோசடி .
காரணம் அர்ச்சகர்களுக்கு என்று #மானியநிலம் உள்ளது.அந்த நிலத்தில் இருந்து நேரடியாக #நெல் பெறும்வரை அவர் #பரம்பரைஎன்று பெயர்.
இதனை மறைமுகமாக ஒழித்துக்கட்ட அறமற்றதுறை முதலில் செய்த திருட்டுத்தனம் அர்ச்சகருக்கு #சம்பளம் தருகிறோம் என்பது. இதன் மூலம் அர்ச்சகர் மானிய நிலங்களை பிடுங்கி #ஏலம் என்ற பெயரியல் திராவிடவாதிகள் கொள்ளை அடித்துவருகிறார்கள்.
என்று அர்ச்சகர்கள் சம்பளம் என்று #கையெழுத்து போட்டார்களோ அன்றே அவர்கள் அறமற்றதுறை #அடிமைகளாகிவிட்டார்கள்.அதன் பிறகு #சொல்வதைசெய் என்பதே அதிகார உத்தரவாக உள்ளது.
2)சரி சம்பளம் கொடுத்தாலும், கொடுக்கும் சம்பளம் தகுதியாக கொடுக்கப்படுகின்றதா என்றால் இல்லை. கிராமக் கோயில்களில் மாதம் ₹500, 750, 1000,1200 என வழங்கப்படுகிறது.
அதுவும் இந்த சம்பளம் நிரந்த அர்ச்சகர் என்றபடிக்கு வழங்கப்படுகிறதா அல்லது தொகுப்ப ஊதியம் என்றபடிக்கு வழங்கப்படுகிறதா என்பது ஒரே மர்மமாக பல இடங்களில் உள்ளது.
3)சரி பெரிய கோயில் அர்ச்சகர்கள் நிலையோ, உங்கள் சம்பளமே வேண்டாம்.ஆளை விட்டால் போதும் என்ற நிலை. காரணம் பெரியகோயிலில் 50 அர்ச்சகர் இருந்தால், அதில் இரண்டு மூன்று பரம்பரை அர்ச்சகருக்கு மட்டுமே சம்பளம். அந்த சம்பளத்தையும் அவர் வாங்கமாட்டார். காரணம் சம்பளம் 2000, 3000சம்பளத்தை வாங்க விருப்பமில்லை.
மேலும் அவர்கள் பல ஆண்டுகளாக வேறு வழியில் சம்பாத்யம் செய்தவர்கள்.
ஆனால் இந்த #முறைஅர்ச்சகர் தன் முறையில் தன் கோத்திர பங்காளி அர்ச்சகர்கள், மாமமன் மச்சான் அர்ச்சகர்களை அழைத்துவந்து சாதாரண நாட்களிலும், #விழாநாட்களிலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு அர்ச்சனை செய்து அனுப்பவேண்டும்.
ஆனால் கோயில் வரும் பக்தர்கள் இவர்களை அறநிலையத்துறை அர்ச்சகர்கள் என நினைத்துக்கொள்வார்கள்.ஆனால் இங்கு திண்டாடுவது கோயில் முறை அர்ச்சகரே. பங்கு செய்தபின் கிடைப்பது வெறும் சொர்பமே.
ஆனால் இவ்வாறு கோயிலில் நடக்கும் விசேஷத்தில் ஏறுபடி அர்ச்சகர்களை இத்தனை பேரை அழைத்து வந்தோம் என அதிகாரத்தில் உள்ளவர்கள் கணக்கு எழுதி லாபம் பார்ப்பார்கள்.
இந்நிலையில் முறை அர்ச்சகர் பக்தர்கள் தரும் காணிக்கையை வைத்தே சமாளிக்கமுடியும் .
நம்முடைய ஆகமங்களிலும் சரி, தமிழ் நூல்களிலும் சரி அர்ச்சகன், சோதிடன், மருத்துவன் இவர்களுக்கு #காணிக்கை #அவசியம்தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நம் தர்மத்தில் உள்ள அர்ச்சகருக்கு காணிக்கை தரவேண்டும் என்ற விசயத்தை தரக்கூடாது எனக் கூறி பலகை வைப்பதற்க்கு நாத்திக திராவிட சிந்தனை போக்கே காரணம்.
என்றுமே #பொருளாதாரபலம் என்பது முக்கியம் .ஒரு அர்ச்சகர் கௌரவமாக வாழ தேவையான பலத்தை பெற நியாயமாக அனைவரும் காணிக்கை தந்து ஆதரிக்கவேண்டும் .
அர்ச்சகர் பிடுங்குவது என்பது வேறு. காணிக்கை பெறுவது என்பது வேறு. #பிடிங்கினால் #கண்டிப்பாக #கண்டியுங்கள்.
ஆனால் காணிக்கை நம் சாஸ்திர தர்மங்களில் கூறப்பட்டதே. அதை #தடை செய்ய எவருக்கு #உரிமை இல்லை.
அர்ச்சகர் சார்ந்த இத்தகைய சர்சைகள் ஏற்பட காரணம் #உயர்பதவிகளில் உள்ள நீதிபதிகள் முதல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என எவருக்கும் #அர்ச்சகர்சார்ந்த#புரிதல் இல்லை என்பதே ஆகும் .
இங்கு கோயிலில் வைத்துள்ள பலகையில் அர்ச்சகர் தட்டுகாணிக்கை பெறக்கூடாது என்று கூறியுள்ளதே அர்ச்சகரை தனிமைப்படுத்தும் சதி.
அதாவது பிராமண துவேசத்தின் வெளிப்பாடு.
கோயிலில் அர்ச்சகர் மட்டும் பணம் பெறவில்லை .கோயில் watchmen ஆரம்பித்து, கணக்குபிள்ளை, கிளர்க்,மேளக்காரர் இப்படி பலர் பணம் பெறுகிறார்கள் .அவர்கள் பெயரையும் சேர்த்து எழுத தைர்யம் உள்ளதா அரசுக்கு?
திருப்பனி நடக்கும் கோயிலில் இந்த திருப்பணியில் பக்தர்களிடம் தவறாக நன்கொடைகளை Eo, Ac, jc போன்ற அதிகாரிகள் ஒரு வேளை தவறான. முறையில் வசூலித்தால் கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறவும் என பலகை வைக்கமுடியுமா?
ஆக இது முழுக்க முழுக்க அர்ச்சகர் மீது கொண்ட பிராமண துவேச வெளிப்பாடே இப்பலகை.
அடுத்து Social media போன்றவற்றால் சில பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்பட்டு #உண்டியலில்காசு போடுவதை நிறுத்திவிட்டார்கள்.உண்டியல் காசு குறைந்தாலே அறநிலையத்துறை #ஆட்டம் கண்டு விடும்.
எனவே மீண்டும் உண்டியலில் காசு போடவைக்கவே, அர்ச்சகருக்கு காணிக்கை போடாதீர்கள் என்ற பலகை வாசகம்.
அர்ச்சகர் காணிக்கை பெறுவது அவரது #தர்மஉரிமை.
(குறிப்பு - இந்த பலகையால் தனிப்பட்ட எந்த பாதிப்பும் எனக்கு இல்லை.இருந்தாலும் இந்த சமூகத்திற்க்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற ஆதங்க வெளிப்பாடே இப்பதிவு.)
ஸ்ரீ ராமர்ப்பணம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...