Friday, February 22, 2019

கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., ராஜேந்திரன் உயிரிழப்பு.

விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., ராஜேந்திரன் (62) கார் விபத்தில் உயிரிழந்தார். 


எம்.பி.,ராஜேந்திரன், ஜாக்காம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, காரில் சென்னை சென்றுள்ளார். அவர் சென்ற கார் திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ராஜேந்திரனின் கார் டிரைவர் அருமைச்செல்வம் உள்ளிட்ட 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...