எமெர்ஜென்ஸி நேரம்! பெரிய பெரிய தலைகளையெல்லாம், இந்திரா அரசு கைது செய்துக்கொண்டிருந்த காலம்! அந்த பெரியவரின் வீட்டிற்கும் செல்கிறது போலீஸ்! அதிகாலை நேரம். வீட்டுக்கதவைத் தட்டி அவரை எழுப்புகிறார்கள்! உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறுகிறது போலீஸ்! ஒரு பத்து நிமிடங்கள் தாருங்கள் என்று அனுமதி பெற்று, காலைக்கடன்களை முடித்துவிட்டு, வாருங்கள் போகலாம் என்று போலீஸ் ஜீப்பில் ஏறினார் முன்னாள் பிரதமர் திரு. மொரார்ஜி தேசாய்!
உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்காண்டுகள் சிறைதண்டனை விதிக்கிறேன்! நீங்கள் உங்கள் இல்லத்திற்குச் சென்று மாற்றுடை எடுத்து வர அவகாசமளிக்கிறேன் என்கிறார் நீதிபதி! அவகாசம் எதுவும் தேவையில்லை, நான் இப்படியே சிறைக்குச் செல்கிறேன் என்று கூலாக சொல்லிவிட்டு, சிறை செல்கிறார், முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா!
ஆனால், 27 முறை ஜாமீன் பெற்று, 28 வது முறை நிராகரிக்கப்பட்ட முன் ஜாமீன் முனுசாமியைக் கைது செய்ய போலீசார் சுவரேறி குதித்து, சேஸிங், ஜம்பிங், ரன்னிங், ஸ்கிப்பிங் எல்லாம் செய்யவேண்டி வந்தது! இந்த நாடகத்தினால், பானாசீனா சாதித்தது ஒன்றுமில்லை! காங்கிரஸின் அடாவடியை மேலும் ஒருமுறை உலகிற்கு திரையிட்டுக் காட்டியதும், இத்தாலிய மாஃபியா வயிற்றில் புளியைக் கரைத்ததும்தான் மிச்சம்!!
No comments:
Post a Comment