சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரம் வீ்ட்டிற்குள் நுழைந்தனர்.
தன் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தேடி வரும் நிலையில் இன்று டில்லி தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் பேட்டியளித்தயைடுத்து காங். தலைமை அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். உடனே அங்கிருந்து காரில் ஜோர்பாக் நகரில் உள்ள தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். உடனே சி.பி..ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடாமல் துரத்தி சிதம்பரம் வீட்டிற்கும் வந்தனர். அப்போது சிதம்பரத்துடன் காங். மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆகியோர் உடனிருந்தனர்.

சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்
சிதம்பரம் வீட்டின் கேட் பூட்டப்பட்டதால் அதிகாரிகள் வீட்டின் கதவை தட்டினர்.கதவு திறக்கப் படாததால் அதிகாரிகள் உடனே சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். ஒரு பிரிவினர் முன் பக்க வழியாகவும், ஒரு பிரிவினர் வீட்டின் பின் பக்க வழியாகவும் உள்ளே நுழைந்தனர்.உள்ளே நுழைந்த அதிகாாிகள் தொடர்ந்து மற்ற அதிகாரிகளையும் உள்ளே அழைத்து சென்றனர். சி.பி.ஐ., அதிகாரிகளை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்தனர்.
டில்லி போலீசார் வருகை
சிதம்பரம் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த சி.பி.ஐ., அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என கருதி டில்லி போலீசாரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து டில்லி போலீசாரும் சிதம்பரம் வீ்ட்டிற்கு வருகை தந்துள்ளனர். தற்போது சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை , டில்லி போலீசார் உள்ளனர்.
காங் தொண்டர்கள் ஆர்பாட்டம்
டில்லியில் சிதம்பரம் வீட்டின் முன்னர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment