ஏற்கனவே, ஏர்செல் - மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ்., மீடியா ஆகிய நிறுவனங்கள் அன்னிய முதலீடு செய்ய அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரம், மற்றொரு வழக்கிலும் சிக்கியுள்ளார். விமானத் துறை ஊழல் தொடர்பான விசாரணைக்கு, 23ம் தேதி ஆஜராகும்படி, அவருக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004 முதல் 2014 வரை அமைந்திருந்தது. அந்த ஆட்சியின்போது, மத்திய நிதித் துறை மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர், காங்., மூத்த தலைவர், சிதம்பரம்.காங்., ஆட்சியின்போது, ஏர்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் அன்னிய முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதேபோல், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெற அனுமதி அளித்ததிலும், முறைகேடுகள் நடந்ததாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த இரண்டு வழக்குகளிலும், சிதம்பரம் மற்றும் தற்போது லோக்சபா, எம்.பி.,யாக உள்ள அவருடைய மகன் கார்த்தி சிக்கியுள்ளனர். அவர்களிடம், சி.பி.ஐ.,யும், இந்த வழக்குகளில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும், விசாரித்து வருகின்றன.இந்நிலையில், காங்., ஆட்சியின்போது, விமானப் போக்குவரத்து துறையிலும் பல மோசடிகள் நடந்துள்ளன. அரசு விமான நிறுவனமான, ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள், முக்கிய சர்வதேச மார்க்கங்களில், விமானங்களை இயக்குவதில் நடந்த முறைகேடுகள் போன்றவை தொடர்பாக, விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், 111 விமானங்கள் வாங்குவதிலும், மோசடி நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. தேசியவாத காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருமான, பிரபுல் படேலிடம், அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, 23ம் தேதி, டில்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி, சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை, சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் இடைத்தரகர் தீபக் தல்வார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பிரபல் படேலிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, சிதம்பரத்துக்கு, அமலாக்கத் துறை, சம்மன் அனுப்பியுள்ளது.ஏற்கனவே, இரண்டு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது. இது அவருக்கும், காங்., கட்சிக்கும் மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வழக்கு என்ன?
கடந்த, 2005ல், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த 'போயிங்' விமான நிறுவனத்திடம் இருந்து, 68 விமானங்கள் வாங்கவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தைச் சேர்ந்த, 'ஏர்பஸ்' நிறுவனத்திடம் இருந்து, 43 விமானங்கள் வாங்கவும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த, 2007ல், 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இவற்றை வாங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. இந்நிலையில், 2007ல், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, ஏர் இந்தியா என்ற பெயரில் இயங்கும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, கடந்த, 2017, மே மாதத்தில், விமானத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.விமானங்களை குத்தகை எடுத்ததில் மோசடி; இந்தியன் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா இணைப்பில் மோசடி; நல்ல வருவாய் கிடைக்கும் சர்வதேச மார்க்கங்களில் இயக்கப்படும் விமான சேவையை, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்ததில் மோசடி என, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதனடிப்படையில், இவற்றில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கின்றது.பிரபுல் படேலுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும், இடைத் தரகர், தீபக் தல்வார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில், பிரபுல் படேல் அளித்த ஒரு பேட்டியில், 'விமானங்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளும், சிதம்பரம் தலைமையிலான, அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டவையே. தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை' என, அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன் ஜாமின் மனு: இன்று தீர்ப்பு
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு மீது, இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்த போது, 2007ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, 350 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம், அனுமதி அளித்தது. இதில், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இதே போல, சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.இவ்விரு வழக்குகளிலும், விசாரணையில் இருந்து சிதம்பரம் நழுவுவதாகவும், எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், இரு விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன.இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், ஆனால், தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன் ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு வழக்குகளிலும், சிதம்பரத்தை கைது செய்ய, தடை விதித்து, 2018, ஜூலை 25ல், நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இதற்கான தடை, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி, 25ல், விசாரணை முடிவடைந்து, தீர்ப்பை ஒத்திவைத்து, நீதிபதி சுனில் கவுர் அறிவித்தார்.இந்நிலையில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன வழக்கில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு மீது, டில்லி உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
No comments:
Post a Comment