Sunday, August 18, 2019

உலக_மனித_நேய_தினம்...!!!

முதலாவது உலக மனித நேய தினத்தை, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று 2009ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். இவர்களை நினைவுகூறும் விதமாக இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மதங்களைத் தாண்டி மனித நேயத்தை மதிப்போம்....!!!
நம்மை பிரிப்பவற்றை தூர வைப்போம்...!!!
நம்மை சேர்ப்பவற்றில் சேர்ந்து நிற்போம்...!!!
#தீரர்_சத்தியமூர்த்தி பிறந்த தினம்...
விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார்.
இவர் சென்னை பார்த்தசாரதி கோவிலில் 1930ஆம் ஆண்டு தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். அதன்பின், இவர் 1939ஆம் ஆண்டு சென்னையில் மேயராகப் பணியாற்றிய போது, இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புதலைப் பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதற்கு அடிக்கல்லை நாட்டினார்.
இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 55வது வயதில் 1943ல் மறைந்தார்.
★1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதன் முதலாக விமானத்தில் பறந்து காட்டிய சகோதரர்களுள் இளைய சகோதரரான ஆர்வில் ரைட் (ORIVILLE WRIGHT) பிறந்தார்.
★1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா பிறந்தார்.
★1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா பிறந்தார்.
★1662ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி கால்குலேட்டரை கண்டுபிடித்தவரும், கணிதத்தில் பாஸ்கல் விதியை அறிமுகப்படுத்தியவருமான பிளைஸ் பாஸ்கல் மறைந்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...