Sunday, August 18, 2019

உண்டியல் வைத்து வசூல் செய்யவில்லை. பட்டாச்சார்யர்கள் தீபம் காட்டி தட்டில் காணிக்கை பெறவில்லை.

ஒரு கோடியே 7500 பேர் தரிசனம்.
காணிக்கையாக ஏழு கோடி ரூபாய் வசூல்.
- அத்திவரதர் தரிசனம் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு
ரஜினிக்காந்த், விஜயகாந்த், நயன்தாரா,
ஓ.பன்னீர்செல்வம், தேவகவுடா, குமாரசாமி, ராஜாத்தியம்மாள், துர்கா ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள், ரவுடி வரிச்சியூர் செல்வம் போன்ற வி.வி.ஐ.பி.கள், பாஸ் இல்லாமல் விஐபி வழியில் சென்றவர்கள், பணம் இல்லாமல் சாதா தரிசனம் செய்தவர்கள், அத்தனை பேருமே நிச்சயம் காணிக்கை போட்டிருப்பார்கள்.
காணிக்கை போடுவதும், பிரசாதம் வாங்குவதும், நமது பழக்கம், நிச்சயம் நடந்திருக்கும்.
1 கோடியே 7500 பக்தர்கள்,
ஒரு ஆளுக்கு குறைந்தது 10 ரூபாய் காணிக்கை போட்டிருந்தால் கூட,
மொத்தம் 10 கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டும்.
ஒரு சிலர் 100 ரூபாய் போட்டிருக்கலாம், 500, 2000 ரூபாய் போட்டிருக்கலாம்.
ஓபிஎஸ் மூன்று முறை தரிசனம் செய்தார்.
விஜபி பக்தர்கள் பத்தாயிரம், இருபதாயிரம் என்று காணிக்கை போட்டிருக்கலாம்.
திருப்பதி போன்று சிலர் ஒரு லட்சம் கூட போட்டிருக்கலாம். 40 ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தரிசனம் அல்லவா.
ஆனால், சராசரியாக 7 ரூபாய் மட்டும் கணக்கில் காட்டியுள்ளனர்.
அதாவது 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்த இடத்தில் 7 கோடி ரூபாய் மட்டும் காணிக்கை கிடைத்துள்ளதாம்.
CCTV கேமரா உள்ளது, 24 மணி நேரமும் மீடியாக்களின் கேமரா இருந்துள்ளது.
அத்தனை இருந்தும் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, ஜிஎஸ்டி, மாநில அரசு, மத்திய அரசு அத்தனை துறை அதிகாரிகளும் அத்திவரதரை தரிசனம் செய்திருப்பார்கள், காணிக்கையும் போட்டிருப்பார்கள்.
ஆனால்... ஆனால்... ஆனால்...
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பதவியிலிருப்பவர்களுக்கும், பட்டாச்சாரியார்களுக்கும், கடவுளின் மேல் பாரத்தைப்போட்டு காத்திருக்கும் பொதுமக்களுக்கும்,
#அத்திவரதர் #அருள்கிடைக்கட்டும்..!
குறிப்பு : அத்திவரதர் தரிசன ஏற்பாட்டிற்காக, வருவாய்துறை 29 கோடி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை 15 கோடி என தமிழக அரசின் செலவு கணக்கில் 45 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கு காட்டியுள்ளனர். அதாவது சராசரியாக தினசரி ஒரு கோடி ரூபாய் செலவு செய்திருப்பார்கள் போல.
ஓம் நமோ நாராயணாய
தகவல் உதவி நன்றி : கப்பிகுளம் ஜெ. பிரபாகர்
அத்தி வரதர் வந்து போனதில் பக்தியோ, கடவுள் அருளோ அல்லது மக்களுக்கு நல்லதோ வெளிப்படவில்லை. மாறாக பல பேர் ஆட்டம் போட்டார்கள், சிலர் ஆட்டைய போட்டார்கள். மொத்தத்தில் ஒரு சூப்பர் சுரண்டல் நடந்தது என்று தான் செய்திகள் தெரிவிக்கின்றன. நாம் கேள்விப்பட்டதெல்லாம் இறைவன் இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் எதுவுமாய் நீக்கமற நிறைந்துள்ளவன் என்பதே. கபீர் என்ற கவிஞன் அழகாக ஒரு கவிதை வரியில் சொல்லுவான் 'நான் கடவுளைத் தரிசிப்பதற்காக கோவிலை நோக்கிச் சென்றேன், கடவுள் என்னை வழிமறித்து நான் அங்கு மட்டும் இருப்பதாக யார் உன்னிடம் சொன்னது' என்று. இதையெல்லாம் ஒரு பக்கம் ஓரம் கட்டி விட்டு சூப்பர் விளம்பரத்துடன் ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...