Sunday, August 18, 2019

காஸ்மீரில் இயல்பு நிலை திரும்பி எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

தொடர்ந்து அனைத்து தமிழக ஊடகங்களில் காஷ்மீர் பற்றி கேட்கும் போது அவர்கள் முக்கியமாக எழுப்பும் ஒரு கேள்வி ?
இன்டர்நெட்கிடையாது போன்கனெக் ஷன் கிடையாது எந்ததகவல் தொடர்பும்கிடையாது வாசலில் ராணுவம் நிக்கிது
இதுவா சுதந்திரம் ?
இதுவா அமைதியான சூழல்? 
இதுவா ஜனநாயகம்?
என்ற கேள்வியைத்தான் கேட்கின்றனர்?
ஒருசராசரி இந்தியனாக எனக்கு ஒருவிஷயம் புரியவில்லை.
சுதந்திரத்தின் அடையாளம் இன்டர்நெட்தானா?
மனிதன்வாழ்வதற்கு தொலைபேசி அத்யவசியமா?
ராணுவம் வாசலில் நிற்பதால் மக்களுக்கு எந்த விதத்தில் அச்சுறுத்தல் உள்ளது?
இப்படியான சூழலில் முக்கியமான ஒரு நடவடிக்கை எடுக்கும் போது தீவிரவாதிகளால் பொதுமக்கள் மிரட்டப்பட்டு கட்டாயத்தின் பெயரில் தூண்டப்பட்டு தெருவில் இறங்கி போராடுவதும். அச்சத்தால் வியாபாரிகள் கடைகளை மூடி உலகுக்கு போலியான எதிர்ப்பை காட்டுவதும் .சாதாரணமாக தமிழ்நாட்டிலேயே திமுக பந்த் அழைப்பில் நாம்காணக்கூடியதுதானே?
எந்த இன்டர் நெட்டும் இல்லாமல் இப்போது காஷ்மீரில் பல பகுதிகளில் 144 நீக்கப்பட்டு மக்கள் அமைதியாக தங்கள் வாழ்க்கையை அமைதியாகவே துவங்கியுள்ளனர். எழுபது வருட கனவு தகர்ந்ததால் குறிப்பிட்ட பிரிவினர் மனதில் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.ஆனால் அந்த ஒரு சமுகத்தின் அதிகார போதைக்காக அங்கு வாழும் இதர அனைத்து மக்களும் அடிமைகளாக நடத்தப்பட்ட நிலை இன்று தகர்ந்து அனைத்து மக்களும் சரிசமம் என்ற நிலையை அதிகாரத்தை தனித்து எழுபது ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்களுக்கு சற்று கோபம் இருக்கத்தான் செய்யும் மறுப்பதற்கில்லை?
அப்படி அதிகார போதையில் இருந்தவர்களை அண்டை நாடு ஒன்று தூண்டிவிட்டுக்கொண்டிருப்பதும் கண்கூடாக கான்கிறோம். இந்நிலையில் அமைதியை விரும்பும் மக்களுக்காக த்தான் ராணுவம் வீட்டு விசாலில் காவல் இருக்கிறதே தவிர அப்பாவி மக்களை துன்புறுத்தவோ பயமுறுத்தவோ இல்லை.
இதில் இன்டர் நெட் தடையை பற்றி வெளிநாட்டு அழைப்புகள் தடை பற்றி மிக அதிகமாக பேசப்படுகிறது.
இந்த இன்டெர்னெட்டும் ளெி நாட்டு தொலைத்தொடர்பும் சராசரி மனிதனின் அத்தியவசிய வாழ்வுக்கு எந்த விதத்தில் உதவுகிறது?
இன்டெர் நெட் சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து உள்ளூரில்ஆணை பிறப்பித்து தீவிரவாதிகளை இயக்கவே பெரும்பாலும் உதவுகிறது.
வெளிநாட்டு தொலைபேசி தொடர்புகளால் சராசரி குடும்பங்களுக்கு சில சரமங்கள் ஏற்படும் என்பது உண்மைதான் ஆனால் அவை எதுவும் இந்தியாவில் வாழும் (காஷ்மீரில்) மக்களின் அத்யாவசிய சேவை எதையும் பாதிக்கப்போவதில்லை!
இன்று இன்டர்நெட் இல்லா காஷ்மீர் மிகுந்த அமைதியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதை பார்க்கமுடிகிறது.இன்னும் சில நாளில் வழக்கமான முழு அளவிலான இணைய சேவைகள் தொடங்கப்படும் என்று அரசும் உறுதியளிக்கிறது .
இந்நிலையில் பத்திரிக்கை தர்மம்என்ற பெயரில் சில அற்பப்பதர்கள் அரசிற்கெதிராக தொடர்ந்து தமிழகத்தில் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் . அவரகளுக்கு ஒன்றைமட்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
உங்கள் பத்திரிக்கை சுதந்திரம் பத்திரிக்கை தர்மம் எல்லாம் மட்டுமல்ல பத்திரிக்கையாளன் கூட சுதந்திரமாக நடமாட ஒரு வலிமையான நேர்மையான அரசாங்கம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை மனதில் கொண்டு மேல் மரத்தில் அமர்ந்து அடி மரம் வெட்டும் துரோகச்செயலை கைவிடுமாறு பணிவுடன் அமைதியும் நேர்மையுள்ள ஆட்சியை விரும்பும் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...